Sep 12: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி, கண்ணீர் புகை வீசி கலவரம் செய்தது போலீஸ். இதனால் காந்திய வழியில் போராட்டம் நடத்திய மக்கள் படுகாயம் அடைந்தனர்.
மேலும் கூடங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதில் உள்ள கிராமங்களை சுற்றிவளைத்து முற்றுகை இட்டது முதல்வர் ஜெயாவின் அராஜக காவல்துறை. இப்படியாக கூடங்குளம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராம மக்கள் திறந்தவெளி சிறைகைதிகளாயினர்.
போராட்ட குழு தலைவர்களின் மனோ வலிமையை தகர்க்க முடியாத காவல்துறை அவர்களுக்கு துணையாக இருக்கும் மக்களை கொடுமைபடுத்தி அதன் மூலம் தலைவர்களை மனம் தளர செய்தது. மக்கள் படும் அவதியை கண்ட உதயகுமார் மற்றும் தலைவர்கள் போலீஸ்சில் சரணடைவதாக முடிவெடுத்தனர்.
தலைவர்கள் சரணடைவதை விரும்பாத அப்பகுதி இளஞசர்கள் உதயகுமார், ஜேசுராஜன், புஸ்பராயன், முகிலன் ஆகியோரை படகில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்பு அணு உலை எதிர்ப்பு மக்கள் இடிந்தகரையில் நேற்று முதல் 48 மணி நேர உண்ணாவிரதம் தொடங்கினர்.
இன்று மதியம் 4 மணி அளவில் உதயகுமார் மற்றும் போராட்ட குழு தலைவர்கள் உண்ணாவிரத பந்தலுக்கு வந்தனர். அவர்களிடம் மக்கள் நீங்கள் காவல்துறையினரிடம் கைதாகக்கூடாது என்று கண்ணீர் மல்க கேட்டு கொண்டனர். மக்கள் மீது தடியடி செய்யக்கூடாது. மக்களாகிய உங்களை துன்புறுத்தக்கூடாது, என்பதற்காகத்தானே நாங்களே முன்வந்து கைதாகிறோம் என்று கூறினோம், என்றார் உதயகுமார்.
இந்நிலையில் உண்ணாவிரத பந்தலுக்கு வந்தார் அன்னா ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவால். அவர் காந்திய வழியில் போராடும் உதயகுமார் போலீசில் சரணடைய தேவையில்லை என்று பேசினார். உதயகுமாரிடம் சரணடைய வேண்டாம் என்று கேட்டு கொண்டார். இதையடுத்து உதயகுமார் மக்களின் விருப்பத்தையும், அன்னா ஹசாரே குழுவின் விருப்பத்தையும் ஏற்று சரணடையும் திட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிகிறது.

3 comments:
கேவலமாக செய்திகளை திரித்து எழுதுவதில் தினமலருக்கு நிகர் யாரும் இருக்க முடியாது.உதயகுமார் போராட்ட பந்தலுக்கு வந்து போகிறார் இப்படி இருக்க அவரை ஒளிந்து கொண்டார், தப்பி ஓட்டம் என்று செய்தி போட்டு கீழ்த்தரமான பத்திரிகை என்று நிருபித்து வருகிறது.
by.......தமிழன்.
ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொள்வதாக காட்டி, புகழ் அடைந்த அரவிந்த் கேஜ்ரிவால், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக செயல்படும், உதயகுமாரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. ஜன்லோக்பால் மசோதா நிறைவேற போராடிய அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு காட்டுவதாக கூறி, அவருடைய கொள்கைகளை நீர்க்கச் செய்தவர் இவர். இப்போது, தமிழகத்திற்கும் வந்து, குழப்பம் விளைவிக்க பார்க்கிறாரோ என கருதத் தோன்றுகிறது. *** SRI RAM.
* தமிழ் மணத்தில் இன்றைய கேவலமான தனி நபர் தாக்குதல்!
* தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!
* இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!
* தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!
அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவரி. tamilnaaththam@gamil.com
Post a Comment