Sep 12, 2012

ஏன்? தனி தமிழ் நாடு அமைய வேண்டும்!


Sep 13: நீண்ட நெடும் காலமாக வட இந்திய அரசியல் சக்திகளால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. இது ஹிந்தி திணிப்பில் தொடங்கி, இலங்கை பயங்கரவாத அரசால் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் மற்றும் கூடங்குளத்தில் முடிந்திருக்கிறது.

கூடங்குளம் அணு மின் நிலையம் மற்றும் கொக்க கோலா குளிர்பானம் தாயரிப்பு, இவைக்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட இடம் கேரளாவாகும். கேரளாவில் அனைத்து கட்சிகள், மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் அவை தமிழகத்தை நோக்கி தள்ளிவிடப்பட்டன.

கூடங்குளத்தில் காவல்துறை நடத்திய வெறியாட்டத்தின் போது, பெண்களை மிகவும் கேவலமாக கெட்ட வார்த்தைகளை கொண்டு திட்டி, பெண்களின் பிறப்புறுப்பில் லத்தியால் குத்தியுள்ளனர். அது மட்டுமல்லாது பெண்களில் சேலையை உருவி அவமானப்படுத்தியுள்ளனர். சிறுவர்களையும், முதியவர்களையும் கடுமையாக தாக்கி காயம் உண்டாக்கியுள்ளனர். வலது பக்கம் உள்ள விடியோவை பார்க்கவும்.

இதுமட்டுமல்லாது கூடங்குளம் பஞ்சாயத்து அலுவுலகத்தையும், டாஸ்மார் கடையையும் போலீசாரே உடைத்து விட்டு, அதை பொதுமக்கள் தலையில் போட்டுள்ளனர். மேலும் கூடங்குளம் மக்களின் வாகனங்களையும், வீடுகளையும், கடைகளையும் காவல் துறையினர் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். சொந்த மக்களை அழித்தொழிக்கும் இந்திய அரசோடு தமிழர்கள் சேர்ந்திருக்க வேண்டுமா?

இலங்கை அரசால் இதுவரை கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 500 தாண்டுகிறது. இந்த செயல் ஒருநாட்டின் மீது போர்தொடுப்பதற்கு சமம். இதே சம்பவம், கேரளா மாநிலத்தவர்களுக்கோ, கர்நாடக மாநிலத்தவர்களுக்கோ நடந்திருந்தால் இந்திய அரசால் மவுனம் காக்க முடியுமா? இல்லை அவர்கள்தான் சும்மா இருப்பார்களா!

எங்களிடம் வலிமையான கடல்படை இருக்கிறது, என்று உலக அளவில் பீற்றி திரியும் இந்தியாவின் கடல்படை, தமிழர்கள் விசயத்தில் எங்கே போனது? ஒருபேச்சிக்கு அமெரிக்காவுக்கு அருகே இலங்கை இருந்திருக்குமேயானால் ஒரு அமெரிக்க குடிமகனை தொட்டிருந்தால் அமெரிக்க கடல்படை என்ன செய்யும்! யோசித்து பாருங்கள்!.

இலங்கை கடல்படையை, நாய்களை அடித்து துரத்துவது போல் துரத்தி இருப்பார்கள். தமிழர்களில் சில அப்பாவிகள் நாம வல்லரசாகனும், அணுஉலை இருந்தால்தான் வல்லரசு, இலங்கை போன்ற அந்நிய நாடுகளின் விசயத்தில் தலையிட்டால்தான் நாம் வல்லரசு என்று நினைக்கிறார்கள். ஒருநாடு தனது நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்காத நிலையில் அதை வல்லரசாக கருத முடியாது.

காவேரி நடுவர் தீர்ப்பு விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை இதுவரை கர்நாடகா மதித்ததே இல்லை. *இதே காவிரி தமிழ் நாட்டில் இருந்து* நாம் கர்நாடகாவிற்கு தண்ணீர் தர மறுத்தோம் என்றால் இந்தியாவின் மொத்த ராணுவமும் இங்கேதான் குவிக்கப்பட்டு இருக்கும். அந்த தண்ணீரை (இப்போது மின்சாரத்தை பகிர்வது போல்) மற்ற எல்லா மாநிலங்களுக்கும் கொடுத்துவிட்டு மீதத்தைதான் நமக்கு கொடுப்பார்கள்.

இன்றும் தமிழகத்தில் உள்ள அரசு சார்ந்த கோப்புகள் எல்லாம் ஆங்கிலம், மற்றும் ஹிந்தியிலேயே உள்ளது. இனப்படுகொலைகள் நடந்த இலங்கையில் கூட திரும்பிய பகுதிகள் எல்லாம் சிங்களம், ஆங்கிலம், தமிழ் என்று மும்மொழிகளும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இங்கே தமிழ் நாட்டில் தமிழில் கோப்புகள் இல்லை. ஆங்கிலமும், ஹிந்தியிலும் மட்டுமே உள்ளன.

இது போதாதென்று இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அனுமதி கொடுக்கப்படாத தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, தேனி மாவட்டத்தில் உள்ள நியூட்ரினோ ஆய்வகம் போன்ற அழிவு சக்திகள் அனைத்தையும் தமிழகத்தை நோக்கி தள்ளிவிடுகிறார்கள். ஒரு கல்பாக்கம் தமிழ் நாட்டுக்கு போதுமானது மீண்டும் இதுபோன்ற அணு உலைகள் தேவையில்லை.

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழர்களுக்கு போதுமானது. தமிழகம் ஒன்றும் பன்னாட்டு நிறுவனங்களின் குப்பை கூடை இல்லை. நமது வளங்களையும், இயற்கையையும் அழிக்கும் விசயங்களை வன்மையாக எதிர்ப்போம். நாம் தமிழர் என்று சொல்வோம். நீண்ட நெடிய வரலாற்று கொண்ட தமிழனுக்கு என்று ஒரு நாடு. தனி தமிழ் நாட்டின் சுதந்திர காற்றை சுவாசிக்க ஒவ்வொரு தமிழனும் தயாராக வேண்டும்.

வெள்ளையனுக்கு எதிராக ஒரு சுதந்திர போராட்டம் நடத்தப்பட்டது. அதுபோல் தமிழகத்தை மீட்க்க மீண்டும் காந்திய வழியில் ஒரு சுதந்திர போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு நமது முழு ஆதரவை தெரிவிப்போம். இந்தியா என்கிற வல்லாதிக்க வடஇந்திய ஆட்சியோடு நாம் ஏன் ஒட்டி கிடக்க வேண்டும். சிந்திப்போம்.

கூடங்குளம் மற்றும் இடிந்த கரை மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று சிந்திக்கவும்
இணையத்தளம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

*மலர்விழி*

6 comments:

eelan said...

தமிழகம் மட்டுமல்ல உலகம் முளுவதும் ஆதரவு உண்டு

eelan said...

போராட்டத்திற்க தம்ழகம் மட்டுமல்ல. உலகத்த்லுள்ள அனைத்துத் தமிழர்கள்களின் ஆதரவு உண்டு

Anonymous said...

Nice article we have to think about that..... Raja

Anonymous said...

It's 100% tru. We have to think.

Anonymous said...

Yes... By mani

SATHISH said...

nan samathikiren, nam tamil nadu thani nadaga mara, appothu than nam suthandhira katrai suvasika mudiyum..............