Aug 29, 2012

யார்? பயங்கரவாதத்தின் ஆணி வேர்!

Aug 30 : ஊட்டி ராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவ அதிகாரிகள் விரைவில் திருப்பி அனுப்பப் படுவார்கள் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இங்கே பயிற்சி கொடுக்காமல் இருந்தால் என்ன இலங்கைக்கு போயி  பயற்சி கொடுத்து வருவார்கள். இந்திய அரசு தமிழர்களை அழித்து ஒழிப்பதையே கொள்கையாக கொண்டுள்ளது. இலங்கை விவகாரத்தில் இந்தியா அங்குள்ள தமிழர்களின் விடியலுக்கு உதவ வேண்டும்.

ஆனால் அதை விட்டு இந்தியா வெறும் கபட நாடகம் ஆடிவருகிறது. இந்தியாவில் தமிழர்கள் என்று ஒரு இனம் வசிக்கிறது என்கிற உணர்வே இந்திய அரசுக்கு கிடையாது. இந்தியாவின் மதிப்பற்ற ஒரு மாநிலம்தான் தமிழ்நாடும் அங்கு வசிக்கும் தமிழர்களும். வட ஹிந்தியனை தவிர்த்து ஒரு தமிழனால் இந்தியாவின் பிரதமராக முடியுமா?

தமிழக உணர்வற்ற அரசியல் கோமாளிகள்  போர் நடக்கும் போதும், சகல உதவிகள் செய்யும் போதும் வாய் பொத்தி மவுனமாக இருந்து விட்டு இப்ப ஆளுக்கு ஆள் நாடகம் ஆடுகிறார்கள். இனி பயிற்சி கொடுத்தல் என்ன பயிற்சி பெற்றால் என்ன? இவ்வளவும் நடந்த பின்னும் தமிழர்களில் ஒரு தேசபக்த கூட்டம் இதையெல்லாம் சரியென்று தலையாட்டி திரிகிறது.

உலகத்துக்கே பட்டவர்த்தனமாக தெரிந்த ஈழப்படு கொலையை நடத்தவும், மறைக்கவும் உதவியவர்கள்தானே இந்த மகாத்மா பிறந்த மண்ணின் அகிம்சைவாதிகள். அரசு என்கிற இயந்திரத்தை வைத்து கொண்டு வல்லரசு என்கிற குடிபோதையில் இவர்கள் செய்தால் அது தீவிரவாதம் இல்லை! அதையே பாதிக்கப்பட்ட மக்கள் செய்தால் அது தீவிரவாதம். இந்திய அரசு பயங்கரவாதத்தின் கோர முகத்துக்கு பலியானவர்கள் எத்தனை இலட்சம் பேர்கள். பயங்கரவாதத்தின் ஆணிவேர் யார்? மக்களா அரசா?
*மலர்விழி*

1 comment:

Anonymous said...

அட என்னாங்க இப்புடி எழுதிப் பூட்டிக ஏதோ இந்தியாவில தமிழன் இருக்கிற மாதிரி ஒங்க மத்திய அரசு நேனைக்கிதா? நம்மப்பற்றி நினைக்க?