Aug 25, 2012

நீயா? நானா? வீழ்த்தப்படும் விக்கெட்டுகள்!

Aug 26: ஈழத் தமிழர் செந்தூரன் உட்பட பலர் சென்னை பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன், தங்களை திறந்தவெளி சிறைக்கு மாற்ற வேண்டும் என, இவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதை தமிழக வருவாயத் துறையினர் ஓப்புக் கொண்டதால், உண்ணா விரதத்தைக் கைவிட்டனர். ஆனால், வாக்குறுதிக்கு மாறாக, அவர்களை தொடர்ந்து சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளனர் நமது உணர்வற்ற காவல்துறையினர்.

இதைக் கண்டித்து, செந்தூரன் கடந்த, 25 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரைக் காண இலங்கையிலிருந்து வந்த அவரது சகோதரி, செந்தூரனின் நிலையைப் பார்த்து, மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் நேற்று இறந்துள்ளார்.

சிந்திக்கவும்: இப்படியாக ஈழத்தமிழர்கள் தங்கள் தொப்புள் கொடி உறவுகள் என்று நம்பும் தமிழர்களின் தமிழ் நாட்டிலே அவதிப்படுகின்றார்கள். இவர்களை பற்றி எந்த கவலையும் படாத தமிழக அரசியல்வாதிகள் குறிப்பாக ஜெயலலிதா மற்றும் கருணாநிதி தங்களை ஒருவரை மாற்றி ஒருவர் தூற்றி கொள்கின்றனர்.

ஒருபுறம் தனது இழந்த  அரசியல் செல்வாக்கை மீட்க்க சர்க்காரியா கமிசன் சொன்ன விஞ்சான ஊழல்காரர் கருணாநிதி டெசோ மாநாடு என்று ஒன்றை நடத்தி  மக்களை ஏமாற்றுகிறார். மறுபுறம் தமிழக பூலான் தேவி ஊழல் மற்றும் கொள்ளைக்காரி ஜெயலலிதா தான்தான் ஈழத்தமிழர்களுக்கு உதவி புரிவதாக பிதற்றுகிறார்.

அந்தோ பரிதாபம்  தமிழர்கள் இந்த ஊழல் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கி சின்னாபின்னம் ஆகிறார்கள். இவர்களின் விளையாட்டில் வீழ்த்தப்படுபவர்கள் தமிழர்களே!
ரௌத்திரம் பழகு
...யாழினி...

No comments: