Aug 22, 2012

வங்க கடல் முழுவதும் ரத்த சுவடுகள்!

Aug 23: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையினரின் பயங்கரவாத போக்கை தடுத்து நிறுத்த தமிழர்கள் ஓர் அணியாக திரளவேண்டும்.

இதுபோன்ற தாக்குதல் நடக்கும்போதெல்லாம் தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டுகிறார்கள் என்று கூறிக் கொண்டு, இந்திய கடற்படையும், இந்திய கடலோரக் காவல் படையும் வேடிக்கை பார்க்கின்றன.

கச்சத்தீவு இலங்கைக்கு உரிய பகுதி என்பதால் அங்கு செல்லும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதாக இந்திய கடற்படை கூறி வருகிறது. நீடித்து வரும் இப்பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் இந்திய அரசின் கொள்கை நிலைதான். 

கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமான பகுதி. இலங்கைக்கு அதை ஒப்பந்த அடிப்படையில்தான் மத்திய அரசு கொடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் கச்சத்தீவு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டபோது, தமிழர்களுக்குப் பாரம்பரிய மீன்பிடி உரிமை வழங்கப்பட்டிருந்தது.


ஆனால், பிந்தைய ஆண்டுகளில் கச்சத்தீவுக்கு இந்திய மீனவர்கள் போகலாம், வலைகளை உலர்த்தலாம், அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்கலாம். ஆனால், மீன் பிடி உரிமையை வழங்க முடியாது என்று  இலங்கை அரசு கூறியது.  இந்தியாவும்
அதை ஏற்றுக் கொண்டதால்தான் ஒப்பந்தம் திருத்தியமைக்கப்பட்டது.  இந்த முடிவால் பாதிக்கப்படுவது தமிழக மீனவர்கள்தான்.

கட்ச்சதீவை இலங்கைக்கு கொடுத்ததனால் முழுக்க முழுக்க பாதிக்கப்படுபவர்கள் தமிழக மீனவர்களே. கச்சத்தீவில் மீன் பிடி தொழில் செய்து பிழைப்பு நடத்துவது தமிழக மீனவர்களே அதனாலேயே மத்திய ஹிந்தி அரசு அதை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது. இப்போது தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை பல்வேறு காரணங்கள் சொல்லி வேடிக்கை பார்க்கிறது. தமிழர்கள் ஓர் அணியில் திரண்டு போராட வேண்டும்.

தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும் மத்திய அரசாட்சியில் பங்கு பெறுவதை தமிழகமும், தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்.

2 comments:

கவி அழகன் said...

Othatku oru niyaayam thevai

Kollappaduvathu thamilan
Thalanin uyirkalenna malivaantha
Allathu kevalamaanathaa

திண்டுக்கல் தனபாலன் said...

/// தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும் மத்திய அரசாட்சியில் பங்கு பெறுவதை தமிழகமும், தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும். ///

நடக்க வேண்டும்...