Aug 20: மும்பை ஐ.ஐ.டி. பொன் விழா பட்டமளிப்பு 18/08/2012ல் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மன்மோகன் கலந்து கொண்டு பேசுகையில், தான் வாழ்க்கையின் ஆரம்ப கால கட்டத்தில் பட்ட கஷ்டங்களை உருக்கமுடன் நினைவு கூர்ந்தார்.
என்னுடைய சொந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது, எனது தலைமுறை கடந்து சென்ற பாதையை கண்டு வருத்தம் அடைகிறேன். புழுதி படிந்த கிராமம் அது. மின்சாரம் கிடையாது. டாக்டர் கிடையாது. பள்ளிக்கூடமோ, கல்லூரியோ கிடையாது.
பள்ளிக்கூடத்துக்கு பல மைல் தூரம் நடந்தே செல்வேன். நான் மண்எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தேன் ஆனால் இப்போது அப்படி இல்லை மக்களுக்கு போதுமான வசதிகள் உள்ளது என்று உருக்கமுடன் நினைவு கூர்ந்தார்.
சிந்திக்கவும்: இப்போ மட்டும் என்ன இந்தியாவில் பாலாரும் தேனாருமா ஓடுகிறது. இந்த பொருளாதார புலி மன்மோகன் ஆட்சியில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை கொள்ளையடித்து தங்களது நாட்டை வளப்படுத்துகின்றனர்.
அன்றைய காலத்தில் படையெடுப்புகள் மூலம் இந்தியாவை பிடித்து பற்பல சிற்றரசுகளாக சண்டை இட்டு கொண்டிருந்தவர்களை ஒரே ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தனர் அந்நிய படைஎடுப்பாளர்கள். அது மட்டுமல்லாது இந்த நாட்டை வளப்படுத்த குளம் வெட்டியது முதல் அணைகள், ரோடுகள் என்று அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து விட்டு மீதத்தை தங்கள் நாடுகளுக்கு கொண்டு சென்றார்கள்.
ஆனால் இந்த நவீன கொள்ளையர்களோ அந்நிய நாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு மொத்த இந்தியாவையும் பிளாட் போட்டு விற்று வருகிறார்கள். மண்ணெண்ணெய் விளக்கில் படித்த மதிகெட்ட பொருளாதார புலி மண்ணு மோகனுக்கு இந்தியாவில் இன்னும் எத்தனை கிராமங்கள் ஒளிபெராமல் இருளில் கிடக்கிறது என்று தெரியாதா?
இன்னும் எத்தனை ஆயிரம் கிராமங்கள் புழுதிபடிந்த மண் ரோடுகலோடும், அடிப்படை மருத்துவவசதி மற்றும் பேருந்து வசதி இல்லாமல் சிக்கித் தவிக்கிறது என்று புரியாதா? இவர் கடந்து வந்த பாதை இருளில் கிடந்ததாகவும் இப்போது இந்தியா ஒளிருகிறது என்றும் கதை அளக்கிறார். அந்நியர்கள் இந்தியாவில் பால் கறந்தார்கள் என்றால் இந்த முதலாளித்துவ கைகூலிகள் பால் சுரக்கும் மாட்டின் மடுவை அறுக்கிறார்கள்.
*மலர்விழி*
1 comment:
mmmmk
Post a Comment