Mar 20, 2012

கொந்தளிக்கும் கூடங்குளம்! மக்கள் சக்தி வெல்லுமா?

March 21: முதல்வரின் வேடம் கலைந்தது: தமிழினப்பேரழிவுத் திட்டமான கூடங்குளம் அணு உலையைத் திறக்க அனுமதிப்பதென்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  
மக்கள் தலைவர் உதயகுமார்: கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த தமிழக அரசின் வேஷம் நேற்றோடு கலைந்தது. இதையடுத்து கூடங்குளம் போராட்டக் குழுவினரைக் கைது செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து இடிந்தகரை விரைந்த உதயக்குமார், அங்குள்ள லூர்துமாதா சர்ச் வளாகத்தில் பல்லாயிரகணக்கான மக்களுடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.

அராஜகம் செய்ய காத்திருக்கும் காவல்துறை: உதயகுமார் இடிந்தகரையில் இன்று 2வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். கூடங்குளம் முழுவதும் பல்லாயிரக்கணக்கில் அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உதயகுமாரை சரணடைய சொல்லி தொடர்ந்து போலீஸ் மிரட்டுதல் விடுத்து வருகிறது.

மேலும் ஆங்காங்கே செக்போஸ்ட் நிறுவி அந்த பகுதிக்குள் உணவு பொருட்கள் செல்வதை போலீசார் தடுத்து வருகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு உணவு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு அதிரடி நடவடிக்கை மூலம்
உதயகுமாரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். நூற்றுகணக்கில் மக்களை கைது செய்து திருச்சி, நெல்லை  சிறைகளை நிரப்பி வருகின்றனர். போலீஸ் வாகன அணிவகுப்பு மற்றும் கடலோரங்களில் ரோந்து விமானங்களை கொண்டு வட்டமடித்து மக்களை பகிரங்கமாக ஒரு மிரட்டுதலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

உதயகுமாருக்கு ஆதரவாக மக்கள் சக்தி: இந்நிலையில் தமிழக அரசின் இம்முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று மாவட்டங்களை சேர்ந்த 15,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் அவர்கள் கூடங்குளத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் கடல் வழியாக கூடங்குளம் வர துவங்கியுள்ளனர். இதனால் இப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. தற்போது மக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கும் வகையில்  144 ம்  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞ்சர் புகழேந்தியின் சீரிய முயற்சி: இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல் புகழேந்தி, தமிழக தலைமை செயலாளர் மற்றும் நெல்லை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீசு பிறப்பித்துள்ளார். கூடங்குளத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை உடனடியாக நீக்காவிட்டால், அவர்கள் இருவர் மீதும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

SDPI கட்சி கோரிக்கை: கூடன்குளம் அணுஉலையை திறக்க வேண்டும் என்ற தீர்மானம் தங்களின் உயிர்வாழும் உரிமைக்காக தன்னெழுச்சியோடு போராடும் மக்களை பெரும் ஏமாற்றத்தில் தள்ளி உள்ளது. தமிழக அரசு தனது தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும். ஜனநாயக ரீதியில் அமைதி வழியில் போராடும் மக்களுக்கு எதிராக ஏந்த அடக்குமுறையையோ கைது நடவடிக்கைகளிலோ ஈடுபடக் கூடாது. கைது செய்யப்பட்ட போராட்ட குழுவினரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா வேண்டுகோள் விடுக்கிறது என்று அதன் மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்தார்.

திருமாவளவனின் நியாமான கேள்வி: கூடங்குளத்தில் திறக்கப்படவுள்ள இந்த அணுஉலைகளை கேரள மாநிலத்துப் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் அங்கே தொடங்க விடாமல் விரட்டியடித்தது ஏன் என்பதை தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும்.  இந்த அணுஉலைகளால் பாதிப்பு இல்லையென்றால், பெருமளவில் பயன் விளையும் என்றால் கேரள மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் அத்திட்டத்தை ஏன் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

மக்களை ஏமாற்றும் போலி கம்யூனிஸ்டு: கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுவதுமாக தமிழ்நாட்டுக்கே வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்  தா.பாண்டியன் திருவாய் மலர்ந்துள்ளார். இது தமிழ்நாட்டுக்கு எடுக்கப்படும் மின்சாரம் இல்லை என்பது தெரிந்தும் ஒரு போலியான வேண்டுகோள். இந்த அணு உலை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்கவும், மேலும் பல பன்னாட்டு நிறுவனங்களை திறக்கவும் நிறுவப்பட்டது என்பது தா.பாண்டியனுக்கு தெரியாதா என்ன?

மமக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி:  மக்களின் விருப்பத்திற்கு எதிராக மிகப்பெரிய துரோகத்தினை தமிழக அரசு இழைத்திருக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரை பொறுமை காத்து விட்டு இப்பொழுது செயல்படுவது அப்பட்டமான சந்தர்ப்பவாதம். கேரளாவில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் துரத்தியடிக்கப்பட்ட அணுஉலையை கூடங்குளம் மக்கள் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும். கூடங்குளம் அணு உலை திறக்கப்படுவதால் தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறைக்கு எந்த தீர்வும் ஏற்படாது.

நாம் தமிழர் கட்சி கண்டனம்: வழக்கறிஞ்சர் சுப்பிரமணியன் உட்பட போராட்டக் குழுவினர் 11 பேரைக் கைது செய்து சென்றது, கூடப்புளி மக்கள் 183 பேரை கைது செய்து சிறை வைத்திருப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் அராஜக நடவடிக்கையாகும். தங்கள் வாழ்விற்கும், வாழ்வுரிமைகளுக்கும் அச்சறுத்தலாக அமையும் அணு உலைக்கு எதிராக அமைதி வழியில் போராடிவரும் மக்களை காவல் துறையைக் கொண்டு ஒடுக்குவது மக்களின் உணர்வை அவமதிக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும்.

கலவரத்தை உண்டாக்க துடிக்கும் தினமலம்:  பொறியில் சிக்கிய எலி என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் உதயகுமார் துணிவு உள்ளவராக இருந்தால் அணு உலை தொடக்க பணிகளை  தடுக்க வேண்டியதுதானே அதை விட்டு விட்டு ஏன் இடிந்தகரையில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளது. இதன்மூலம் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் கலவரத்தை உண்டாக்கி கொஞ்சபேரை சுட்டுத்தள்ள ஐடியா கொடுகிறது கேவலமான தினமலம்.  பெரியார் சரியாகத்தான் சொன்னார் பாம்பையும் பார்பனனையும் பார்த்தால் முதலில் பாம்பை அடிக்காதே பார்பனனை அடியென்று.

களம் இறங்கியது நிஜ கம்யூனிஸ்டு: இந்த அடக்குமுறைகளும், கைதுகளும் ஏற்படுத்தும் தற்காலிகப் பின்னடைவுகளை வென்று முன் செல்வோம் என நிஜ கம்யூனிஸ்டுகள் அறிவித்துள்ளனர். ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் போராடும் மக்களுக்குத் துணை நிற்பார்கள். மேலும் “கூடங்குளம் அணு உலையை மூடு, அடக்குமுறையை நிறுத்து, பொய்வழக்கில் கைது செய்தவர்களை விடுதலை செய்” என்ற முழக்கங்களின் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன என அறிவித்துள்ளனர்.  

இதுபோல் மக்கள் மீது நடத்தப்படும் அராஜகம் மற்றும் கொடுமைகள்தான் மக்களை ஆயூத போராட்டத்தை நோக்கி நகர்த்தும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிட கூடாது. காந்திய வழியில் போராடினால் இனி எதுவும் நடக்காது என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. 

அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல். 

18 comments:

Anonymous said...

மக்கள் சக்தி வெல்ல மானம் உள்ள ஒவ்வொரு தமிழனும் போராடுவான்.

Kabilan said...
This comment has been removed by the author.
கபிலன் said...

போலி மக்கள் தலைவர்களின் முகத்திரையை கிழித்து, அப்பாவி மக்களுக்கு உண்மையை விளங்க வைக்கும் பொறுப்பு அரசுடையது. அதனை தமிழக முதல்வர் விரைவில் செய்ய வேண்டும்

ஊரான் said...

கைதுகளும் இழப்புகளும் இன்றி எந்தப் போராட்டமும் முன்னேற முடியாது. போராடும் மக்கள் பக்கம் தமிழகம் திரள வேண்டும்.

Anonymous said...

கூடங்குளத்தில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை உடனே நிறுத்தவேண்டும்...

கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்...

Hitler's Germany...Sadam's Iraq...Now Singh's India...

Shame on you Jaya...

Seeni said...

adapaavikalaa...!

Anonymous said...

கூடங்குளம் மக்களே! அணு உலை பிடிக்கவில்லை என்றால் வெளியேறுங்கள் – தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூடங்குளம் அணுமின் நிலைய திறப்பு தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஆதரிப்பதாக சொன்னார். அங்குள்ள மக்கள் எதிர்க்கிறார்களே என கேள்வி எழுப்பப்பட்ட போது, மக்களுக்குப் பிடிக்காவிட்டால் இழப்பீடு வாங்கிக் கொண்டு வேறு எங்காவது வெளியேற சொல்லுங்கள் என்று கூறினார். போராடும் மக்களைப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஒருவர் இவ்வாறு கொச்சைப்படுத்திக் கூறியுள்ளது மிகவும் வேதனைக்குரியது. கூடங்குளம் அணு உலையின் வயது 15 ஆண்டுகள் தான். ஆனால், அங்குள்ள மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வசிக்கிறார்கள். அவர்களை வெளியேற சொல்வதற்கு எத்தனை மனத்துணிவு “தோழருக்கு”.

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் மனித உயிருக்கு மதிப்பளிக்கும் நல்லவர்களின் மிது உண்டாவட்டுமாக... தமிழக அரசின் தறுதலையான முடிவுக்கு தமிழக மக்கள் தலைகுனிவதும் தலைநிமிர்வதும் ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து முடிவு எடுக்கும் தருணம் இது ....அடக்குமுறைக்கு அடிபணிந்து நாளைய தலைமுறையை உணமுற்ற தலைமுறையாக [ உணமுற்ற தமிழகத்தை] உண்டாக்கனுமா சிந்திப்போம் அடக்க நினைப்போர்களை அடக்கிடுவோம் ......இவன் ..புனிதப்போராளி

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் மனித உயிருக்கு மதிப்பளிக்கும் நல்லவர்களின் மிது உண்டாவட்டுமாக...கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்க்கும் மக்களை கலவரத்தை உண்டுபண்ணி கொன்றுகுவித்து மனிதரத்தை மையாக்க நினைக்கும் தினமல பத்திரிக்கையை கலவரத்தோடு கலவரமாக கருணைக்கொலை செய்ய யாராவது முன்வருவார்களா......புனிதப்போராளி

Anonymous said...

கூடங்குளம் பாக்கிஸ்தானின் ஒரு பகுதி என நேயர்கள் அறிந்து வைத்திருப்பீர்கள்.

ஆயிரக்கணக்கில் இருக்கும் ஒரு சிறு கூட்டம் அறவழியில் மிக மோசமான முன்னுதாரணங்களோடு போராடி வருகிறது.

இதை எப்படி அனுமதிக்க முடியும்?.
முள்ளிவாய்க்காலில் அழித்தொழித்தது போல் இந்த கூட்டத்தையும் ஒழிக்க வேண்டும்.

இந்தக்கலையில் வல்லவரான ராஜபக்‌ஷேவின் ஆலோசனையை அவசியம் பின்பற்ற வேண்டும் நமது அரசுகள்.

இப்போது சாகும்வரை உண்ணாவிரதம் எனும் கொடிய பேரழிவு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.

இந்த ஆயுதத்தை கண்டு பிடித்தவர் காந்தி எனும் படு பயங்கர தீவிரவாதி.
இதிலிருந்தே தெரிய வில்லையா! இந்தக்கும்பல் யாரை பின்பற்றுகிறது என்று...

அணு உலையை விட ஆபத்தானவர்கள் அணு உலை எதிர்ப்பாளர்கள்.

ஒரு நாளைக்கு 28 மணி நேரமும் தமிழ் நாட்டுக்கு தடையில்லா மின்சாரம் தரும் கூடங்குள அணு உலையை ஆதரிப்போம்....அணி திரள்வோம்....

Anonymous said...

அனானி தோழரே இதுதான் வஞ்சப்புகழ்ச்சி அணி என்பதோ............................ நட்புடன்: ராஜா.

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நல்லவர்களின் மிது உண்டாவட்டுமாக......மறைகழண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன் தனது குடும்பத்துடன் அணுமின் நிலையத்தின் அருகில் வசிக்க தயாரா என்று கேட்கனும் ..,

ulaganayagan said...

aatharipavarkal anaivaraiyum,kudankulam aruhil vasika erpaadu seyya vendum.

Senthil said...

ஒரு தமிழனாய் என் மனம் கொதிக்கிறது நன் இருபதோ கோவையில் நான் என் எதிர்ப்பை எப்படி காட்டுவது எனக்கு கமெண்ட் கொடுப்பதில் என் உணர்ச்சியை கட்டுபடுத்த முடியவில்லை ! நண்பர்களே நல்ல அறிவுரை கொடுபீரகளாக!!! குடியுரிமை வேண்டாம் என்று ரேஷன் கார்டை சமர்பிக்கலாமா? வோட்டுரிமை வேணாம் எனலாமா ?

Senthil said...

ஒரு தமிழனாய் என் மனம் கொதிக்கிறது நன் இருபதோ கோவையில் நான் என் எதிர்ப்பை எப்படி காட்டுவது எனக்கு கமெண்ட் கொடுப்பதில் என் உணர்ச்சியை கட்டுபடுத்த முடியவில்லை ! நண்பர்களே நல்ல அறிவுரை கொடுபீரகளாக!!! குடியுரிமை வேண்டாம் என்று ரேஷன் கார்டை சமர்பிக்கலாமா? வோட்டுரிமை வேணாம் எனலாமா ?

Anonymous said...

உங்க்ளை இன்னும் கைது பண்ணவில்லையா?

VANJOOR said...

இசுலாமியர்கள் தினமும் வணங்குவது சிவலிங்கத்தையா? என்று அறியாமையினாலோ, விஷமத்தனமாகவோ, காழ்புணர்வாகவோ பதிவுகளை காணுகிறோம்.

இஸ்லாத்தின் மீது உள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக் கல்லை வணங்குகின்றனர் என இஸ்லாத்தின் எதிரிகளால் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

மக்காவுக்கு செல்கின்ற முஸ்லிம்கள் அங்கே கஃபா எனும் இறை இல்லத்தில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டிருக்கும் ‘கருப்புக் கல்’ என்று சொல்லப்படக் கூடிய அந்தக் கல்லைத் தொட்டு முத்தமிடுகின்றனர்.

இவ்வாறு தொட்டு முத்தமிடுவது என்பது அந்தக் கல்லிற்கு புனித சக்தி இருக்கிறது என்பதற்காகவோ அல்லது அந்தக் கல் முஸ்லிம்களின் தேவையை நிறைவேற்றுகின்றது என்பதற்காகவோ அல்ல!

சொடுக்கி >>>>>
முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா?
<<<<< படிக்கவும்.

Anonymous said...

//இவ்வாறு தொட்டு முத்தமிடுவது என்பது அந்தக் கல்லிற்கு புனித சக்தி இருக்கிறது என்பதற்காகவோ அல்லது அந்தக் கல் முஸ்லிம்களின் தேவையை நிறைவேற்றுகின்றது என்பதற்காகவோ அல்ல!//
முகமது கல்லை தொட்டு கும்பிட்டதால் முஸ்லிம்களும் ஒரு கல்லுக்குப் போய் முத்தம் கொடுக்கிறார்கள். பாவம், பொது அறிவு இருந்தால் இப்படியெல்லாம் செய்யமாட்டார்கள்.