Feb 16, 2012

ஆடாதோடை இலையும் அதன் மருத்துவ குணமும்!

ஆடாதோடை இதன் முருத்துவ பெயர் ( Adhatoda zeylanica) ஆகும். இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.  ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது.

உடலில் தசைப்பகுதிகளில் ஏற்ப்படும் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள்
இதில் இருக்கும் வாசிசின் என்னும் வேதிப்பொருள்  நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால் ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.


  1. சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
  2. இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
  3. இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
  4. இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும்.
  5. இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
  6. ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்

5 comments:

Seeni said...

ada!
iraivan namakku evvalavo
payanai vaiththu irukkiraan!
naam kuraivaaka nantri seluththu kirom!

Anonymous said...

நல்லப் பதிவு ...நன்றி ...
ஆனாலும் இதுலாம் நாங்க பார்த்ததே இல்லை ...
இனிமே பார்த்துப்போடுவோம் ...

PUTHIYATHENRAL said...

வாங்க சீனி நலமா! உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் கலை நலமா. இந்த ஆடாதோடை இலையை எங்கள் கிராமத்தில் மருத்துவத்திற்கு பயன்படுத்துவார்கள். அதனால் இது குறித்து ஒரு பதிவு. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

kuppusamy said...

நல்ல பயனுள்ள பதிவு. ஆடாதோடை செடியை வேலியாகப்போட்டால் வரும். அதைத் தேவையுள்ள போது இலை பறித்துப் பயனடையலாம். நன்றி.