Feb 12, 2012

இவர்கள் டாக்டர்களா? அல்லது எமதர்மர்களா?

FEB 13: இவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஆந்திராவில் ஜுனியர் மருத்துவர்களின் வேலை நிறுத்தம் நீடித்து வருவதால், சிகிச்சை கிடைக்காமல் இன்று ஒரே நாளில் 44 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்

ஆந்திராவில் பயிற்சி மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவித் தொகையை, 40 சதவீதம் அதிகரிக்க வேண்டும். கிராமங்களில் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதை ஓராண்டாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆயிரத்துக்கும் அதிமான பயிற்சி மாணவர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிந்திக்கவும்: இவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு அப்பாவி மக்கள் ஜனநாயக வழிகளில் போராட்டம் நடத்தினால் போடா, தடா, தேசிய பாதுகாப்பு சட்டங்களை கொண்டு ஒடுக்கும். மக்கள் போராட்டங்களை ஒடுக்க அரசு பயங்கரவாத படைகளான போலீஸ் மற்றும் ராணுவம் ஏவி விடப்படும். ஆனால் இப்படி ஒரு வேலை நிறுத்தத்தின் மூலம் ஒரே நாளில் 44 அப்பாவி மக்களை கொன்றவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது.

இந்த வெள்ளை உடை தரித்த அழுக்கு பிடித்த கயவர்கள் வேலை நிறுத்தம் என்கிற பெயரில் 44 அப்பாவி மக்களை கொன்றிருக்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் பயங்கரவாதம்தான். மக்களுக்கு தேவையான உணவுகளை பதுக்கும் பதுக்கல் வியாபாரிகள், போலி மருந்துக்களை தயாரித்து மக்கள் உயிருக்கு உலைவைக்கும் மருந்து கம்பெனிகள், இதுபோன்று உயிர்காக்கும் பணிகளில் உள்ளவர்கள் செய்யும் வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றால் பாதிக்கபடுவது ஏழை எளிய மக்களின் உயிர்களே. இந்த கயவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். செய்வார்களா இந்த போலி அரசியல்வாதிகள். இல்லையேல் மக்களே இவர்களுக்கு தண்டனை கொடுக்க முன்வரவேண்டும். 
ரௌத்திரம் பழகு 
...யாழினி...

9 comments:

VANJOOR said...

.
.
.

சொடுக்கி >>>>>
இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்ப‌ட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம். பிப்ரவரி 14 போராட்டம். ஏன்?
<<<<<< கேளுங்க‌ள்.
.
.
.

Seeni said...

ada kodumaiye..!

Seeni said...

ada kodumaiye..!

Seeni said...

ada kodumaiye..!

Seeni said...

sinthikkavum "-
ungaludan "vesatile blogger award"
pakirnthu kolkiren!
paarkka -seeni -kavithaigal.blogspot.com

Seeni said...

sinthikkavum "-
ungaludan "vesatile blogger award"
pakirnthu kolkiren!
paarkka -seeni -kavithaigal.blogspot.com

Seeni said...

sinthikkavum "-
ungaludan "vesatile blogger award"
pakirnthu kolkiren!
paarkka -seeni -kavithaigal.blogspot.com

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவனின் சாந்தியும் சமாதானமும் அப்பாவிமக்கள் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக.....போராட்டம் எனபது மக்களின் அடிப்படை தேவைகளுக்காக நடத்தப்படும் ஒரு ஜனநாயக வழிமுறைகளில் ஒன்று இந்த போராட்டத்தினால் எந்த ஒரு மனித உயிருக்கும் இது ஆபத்து வந்து விடக்குடாது இதில் கவனம் போராட்டத்தை நடத்துபவர்களிடம் இருக்கனும் ஆனால் இந்த நாட்டில் அப்பாவிகள் நடத்தும் ஜனநாயக வழியான போராட்டங்கள் யாரையும் பாதிப்பதில்லை இப்படிபட்ட போராட்டங்களை அரசாளும் குள்ளநரிகளுக்கு புரிவதும் இல்லை இதை இவர்கள் கண்டுகொள்வதும்மில்லை ஆனால் பணக்கார வர்க்கத்தினர் அல்லது உயர்சாதியினர் போராட்டம் நடத்தினால் பாதுகாப்பு கொடுப்பதும் உடனுக்குடன் பரிசிலனைக்கு எடுப்பதும் நடந்து வருகின்றது இதை வன்மையாக இந்த நாட்டுமக்கள் கண்டிக்கனும்..,, 50 ஆண்டுகாலமாக முஸ்லிம் சமதாயம் மிகவும் பின்தங்கியநிலையில் வறுமைகோட்டுக்கு கிழவாழும் மக்களாக இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றோம் சொந்த நாட்டில் வருமானத்திற்கு வழியில்லாமல் அரபுநாடுகளில் பாலைவனத்தில் கஷ்டப்பட்டு எங்கள் மக்களின் பசியாற்றி வருகின்றோம் எங்களின் சந்ததியினர்களுக்கும் இந்த நிலை வரக்குடாது என்று ஜனநாயக வழியில் பலவருடங்களாக எங்கள் சமுதாயத்திர்க்கான வாழ்வுரிமையை அளியுங்கள் என்று போராடி வருகின்றோம் எந்த ஒரு மக்களுக்கும் பாதிப்பில்லாத எங்களின் போராட்டங்கள் இந்தியமன்னையாளும் கல்நெஞ்சக்காரர்களுக்கு தெரிவதும் இல்லை கண்டுகொள்வதும் இல்லை...,, 2 சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் 90 சதவிகித அரசுப்பணிகளில் இருக்கின்றார்கள்.., 24 சதவிகிதம் உள்ள முஸ்லிம்கள் 1 அல்லது 2 சதவிகிதம்தான் அரசுப்பணிகளில் இருக்கின்றார்கள் இப்படி பல பிரச்சினைகளை பல சமுகம் சந்திக்கின்றது இதுவே ஜனநாயகம் இல்லாத இந்தியா உருவாகிக்கொண்டிருக்கின்றது என்று சொல்ல்வதைதவிர வேறு என்ன சொல்லுவது..ஜனநாயக வழியை நம்பும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஜனநாயகத்தின்மீது நம்பிக்கையிழந்து வருகின்றார்கள் என்பதுதான் உண்மை காலம்தான் பதில் சொல்லும் ...இப்படிக்கு ...புனிதப்போராளி

Anonymous said...

நல்ல சமூக அக்கறையுள்ள பதிவு. நன்றி தோழரே.