JULY 25, புவனேஷ்வர்: தலித் சமூகத்தைச் சார்ந்த தன்னிடம் சக ஊழியர்கள் பாரபட்சம் காட்டுவதாக எம்.எல்.ஏ காசிநாத் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகாரப்பூர்வமான கூட்டங்களில் இதர நபர்களுடன் உணவு உண்பதற்கு அனுமதிப்பதில்லை எனவும், தனக்கு உணவுக்காக தனி அறையை ஒதுக்குவதாகவும் அவர் ஒரிஸ்ஸா மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் தரம் குறைந்த தட்டுக்களில் உணவு அளிக்கப்படுகிறது. பிறருடன் வாழவும், பழகவும் வாய்ப்பு தருவதில்லை. கடந்த ஜூலை 20-ஆம் தேதி அதிகாரப்பூர்வ கூட்டத்தில் பிறருடன் உணவு அருந்த தன்னை அனுமதிக்கவில்லை என காசிநாத் குற்றம் சாட்டியுள்ளார். பி.ஜெ.டி கட்சியின் எம்.எல்.ஏவான காசிநாத் இவ்விவகாரத்தில் தலையிட சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
7 comments:
உனக்கில்லை வாழ்வு இங்கு, தமக்கில்லை ஈடு இங்கு எனும், பிராமணீய வேரறுக்கும் வரை உனக்கில்லை வாழ்வு இங்கு.
பெயரென்ன? காசி நாதனா? அல்லது நாவிதனா? என்ன பெயர் வைத்து
என்ன பயன் இங்கு? நீ சூத்திரன். உன் பிரவியோடு கூடிவிட்ட இழிநிலையால்
நீ வானுயர் வளர்ந்தாலும், நீ மற்றவனுக்கு நிகரல்ல, நீ ஒரு தகாதவன் - தீண்டுவதற்கு.
பாபு ஜெகஜீவன்ராமை தெரியுமா உனக்கு? இந்திய திருநாட்டின் பாதுகாப்பு அமைச்சராய்
இருந்த தூய இந்திய திருமகன். விட்டதா அவரை அந்நிய பார்பனீயம்? பல தருணங்களில்
அவரை அழ வைத்தது. ஒரு முறை முட்டாள்தனமாய் அவரை ஒரு நீதியரசரின் நாற்காலியில்
உட்கார வைத்து அழகு பார்த்துவிட்டது சில அப்பாவி இந்திய உள்ளங்கள். பொறுக்குமா
பார்பனீயம்? அந்த நாற்காலியில் அடுத்து அமர வந்த பார்ப்பனன் அந்த நாற்காலியை ஹோமமோ,
என்ன இழவோ செய்து சுத்தம் செய்துவிட்டுதான் அமர்ந்தான்.
வெளியே வா இந்தியனே உன் கண்ணொளி மறைக்கும் புரை கிழித்து வெளியே வா!! வெளியே வா!!
DALITH MAINTHAN
தலித் மக்கள் என்றால் தீண்டத்தகாதவர், இது ஹிந்துத்துவா வர்ணாசிரமம் தலித் மக்களுக்கு கொடுத்த பரிசு. என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு தலித் குடுபத்துடன் திருமண சம்மந்தம் செய்கிறாரோ அன்று நம்மால் ஒத்துக்கொள்ள முடியும் இந்து மதத்தில் தீண்டாமை இல்லை என்று. ஆர்.எஸ்.எஸ். பார்பன பண்டாரங்களே இதற்க்கு பதில் சொல்லுங்கள். உங்களால் முடியாது ஏன் என்றால் மனுதர்மம்தானே உங்கள் ஹிந்துராஜியத்தின், அகண்ட பாரதத்தின் சட்ட நூல். தமிழன்.
மாட்டின் மூத்திரத்திற்கு இருக்கும் மதிப்பு ஆதி இந்தியனுக்கு இல்லை என்பது பகல் வெளிச்சமாய் இருந்தும் இவர்களின் மூளைக்குள் உண்மை இறங்க மறுக்கும் காரணம் என்ன? தெரிந்தவர் சொல்லுங்களேன்.
- DALITH MAINTHAN
என்று தணியும் இந்த சாதீய மோகம்
உங்கள் கருத்துக்கு நன்றி மகேந்திரன் சார்! மீண்டும் வாருங்கள் கருத்து சொல்லுங்கள்! நட்புடன் ஆசிரியர்- புதியதென்றல்.
கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி!
MR. MAHENDIRAN, WE ARE NOT EXPECTING THE CASTISM TO DIMINISH BUT TO ERADICATE IN ORDER TO EMANCIPATE MY DALITH BROTHERS THE REAL INDIAN THE INDIGENOUS
- DALITH MAINTHAN
Post a Comment