Jul 7, 2011

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கம்!

JULY 08, இஸ்லாமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருநாட்டு உறவுகள் குறித்து, வரும் 27ம் தேதி, டில்லியில், பேச்சுவார்த்தை நடைபெ றும் என்று செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே இருநாட்டு உறவுகள் தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை, கடந்த மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில், இரு நாட்டு வெளியுறவுத்துறை செயலர்கள் மட்டத்தில், இஸ்லாமாபாத்தில் நடந்தது.

இதன் தொடர்ச்சியாக, இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தை, வரும் 27ம் தேதி, டில்லியில் நடைபெறும். இருநாடுகளுக்கு இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டு விரிவாக்கம், வர்த்தகம் மற்றும் அணு ஆயுதங்கள் பற்றி பேசப்படும் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சிந்திக்கவும்: ஒவ்வொரு முறை இந்தியா, பாகிஸ்தான் இடையில் பேச்சுவார்த்தை நடக்கும் போதும் அதை குலைக்கும் அடிப்படையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் ஏதாவது குண்டு வெடிப்பு நடத்தப்படும். இந்த முறை அரசு ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும். இந்தியா பாகிஸ்தான் இரண்டும் நட்புறவோடு செயல்பட்டால் இரண்டு நாடுகளும் முன்னேற்றம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

1 comment:

Anonymous said...

அண்ணே! இரண்டு நாடுகளும் நட்புறவோடு நடந்துகொண்டால் எங்க பொழப்பு எப்படி நடக்கும். பாகிஸ்தான் பெயரை பாகிஸ்தானி சொல்றானோ இல்லையோ நாங்க 10 மூச்சுக்கு ஒரு தரம் சொல்லித்தான் எங்க குடும்ப உறுப்பினர்களை தூங்காமல் பாத்துக்கறோம். பார்டர் பாதுகாப்புக்கு லட்சம் கோடிகள் செலவாகட்டும். விவசாயிகள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளட்டும். பட்டினி சாவுகள் கிராமத்துக்கு ஓன்று என்ற விகிதாசாரத்தில் நடக்கட்டும். சுகாதாரம் சீர்குலைய்யட்டும். இளைஞர்கள் சினிமா பைதியங்கலாகட்டும். ஆனால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் மட்டும் உறவு வந்துவிடக்கூடாது. பாகிஸ்தானின் பெயர் சொல்லித்தான் இங்கு உள்ள முஸ்லிம்களை, முஸ்லிம் குழந்தைகளை தீயால் கரிக்கிறோம். இதற்கு காரணமெல்லாம் கேட்கவேண்டாம். எம் இந்து மதத்தலைவர்கள், சங்கரமடங்கள் எல்லாம் இதைத்தான் ஆதரிக்கின்றன. நடந்தது எல்லாம் நன்றாகவே நடந்தது. நடப்பது எல்லாம் நன்றாகவே நடக்கிறது. நடக்கவிருப்பதும் நன்றாகவே நடக்கும் (கீதை).
- நரேந்திரன்