ஜூலை 02, ஜெனிவா: காங்கோ நாட்டில் கடந்த மாதம் அந்நாட்டு ராணுவத்தினர் சுமார் 121 பெண்களை கற்பழித்ததாக ஐநா மனித உரிமைகள் அலுவலகம் கூறியுள்ளது.
தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள நையாகிலே என்னும் கிராமத்தில், ஜூன் 11 முதல் 13 வரையிலான தேதிகளில் இந்த குற்றச் சம்பவம் நிகழ்ந்ததாக ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கோல்வில்லே தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து கூடுதல் விவரம் திரட்ட, ஐநா புலனாய்வாளர்கள் அடுத்த வாரம் சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு நேரில் செல்கின்றனர் என்றும் அவர் கூறினார். காங்கோவில் ராணுவத்தினரும் தீவிரவாதக் குழுக்களும் இவ்வாறு கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடுவது அடிக்கடி நிகழ்கிறது.

சிந்திக்கவும்: நாகரிகம் வளர்ந்த காலத்தில் காட்டுமிராண்டிகள் போல் பெண்கள் மீது வன்கொடுமைகளை கட்டவிழ்த்து விடும் இவர்களுக்கு உடனே மரணதண்டனை விதிக்கவேண்டும். சினிமா மற்றும் கல்வியில் மாற்றம் வேண்டும். ராணுவத்திற்கும், காவல்துறைக்கும் மனித உரிமைகள், பெண்களை போற்றுவது பற்றி கற்று கொடுக்க வேண்டும். ஆணாதிக்க உணர்வை ஒழித்து பெண்களுக்கு சம உரிமையும், பாதுகாப்பும் வழங்கிடல் வேண்டும். நாகரிக உலகம் இதில் கவனம் செலுத்துமா?
-யாழினி-

1 comment:
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே! தொடந்து படியுங்கள் கருத்துக்களை எழுதுங்கள்! வாழ்த்துக்கள். நட்புடன் - புதியதென்றல்.
Post a Comment