ஜூலை21 நாகர்கோவில்: பாலியல் ரீதியாக தன்னை தொடர்ந்து 20 மாதங்கள் கொடுமைப் படுத்தியதாக கேரள மாணவி, ஆலுவா நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பள்ளி மாணவி விபசாரத்தில் தள்ளப்பட்டு, பலரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக குமரி மாவட்டத்தை சேர்ந்த கான்ட்ராக்டர் மணிகண்டன் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேரை மாணவி, நீதிபதியிடம் அடையாளம் காட்டியுள்ளார். இந்நிலையில், ஆலுவா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது, மாணவி கூறியதாவது:
பாலியல் ரீதியாக நான் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டேன். 20 மாதங்களாக தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டேன். அதிருப்பள்ளி என்ற இடத்தில் ஒரு வீட்டுக்கு என்னை புரோக்கருடன் என் தந்தை அழைத்து சென்றார். அங்கு சென்றபோது அங்கிருந்தவருக்கு அடியாட்களாக மேலும் 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். என்னுடன் வந்தது யார் என்று அவர்கள் கேட்டனர், அப்போது, எனது தந்தை என்று கூறினேன்.
அவர்கள் தந்தையிடம் நான் யார் என்று கேட்டனர். தனக்கு தெரிந்த பெண் என்று மட்டும் அவர் கூறினார். எல்லா இடங்களிலும் இப்படித்தான் கூறினார். ஆனால், அங்கிருந்த நபர் என்னை நம்பினார். எனது செல்போனில் இருந்த குடும்ப போட்டோவையும், அங்கிருந்த நபரிடம் காண்பித்தேன். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் எனது தந்தையை தாக்கினர். புரோக்கரையும் விரட்டியடித்தனர். பின்னர் எங்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினர்.
பணம் சம்பாதிப்பதற்காக எனது தந்தை என்னை, அவரது பைக்கில் அமர்த்தி கோழிக்கோடு வரை அழைத்து சென்று பலருக்கும் விருந்து படைக்க செய்தார். ஒருமுறை பெங்களூரில் தந்தையின் அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது மற்றொரு நபர் என்னை பலாத்காரம் செய்தார். எனது தந்தை அதனை கண்டும் காணாதது போன்று தூங்கிக் கொண்டிருந்தார். நான் பலமுறை தந்தையை தட்டி எழுப்பியபோதும் அவர் எழுந்திருக்க வில்லை.
ஒரு கட்டத்தில் உறவினர் ஒருவரிடம் எனக்கு நடந்து வரும் கொடுமைகளை தெரிவித்தேன். அவர் சொன்னபடி உறவினர்களிடம் தெரிவித்தேன். அதன்பின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். பின்னர்தான் இந்த கொடுமையில் இருந்து வெளியே வந்தேன். இவ்வாறு மாணவி கூறியுள்ளார்.
2 comments:
வணக்கம் சகோதரரே இதை ஏற்க்கனவே படித்துவிட்டேன் .இந்தக்
கொடுமையை செய்த அவளின் தந்தைக்குத் தகுந்த தண்டனை
வழங்கப்பட வேண்டும். இந்தக் கொடுமையைத் தலைதூக்க விடக்
கூடாது.இது சமூக சீர்கேட்டுக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கும்
பெரும் அச்சுறுத்தலை ,அவலத்தை ஏற்படுத்தும் ஒரு செயல்.......
மிக்க நன்றி பகிர்வுக்கு .
வணக்கம் அம்பாளடியாள் எப்படி இருக்கீங்கள்! இந்த செய்தி ஏற்கனவே வெளிவந்ததுதான்! இதை நாம் 14 வயது சிறுமையை கற்பழித்த 150 மேற்ப்பட்ட காம கழுகுகள் என்று போட்டிருந்தோம். அந்த செய்தியின் தொடர்ச்சியாக அவர்கள் இப்போது 50 பேர் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே அதன் தொடர்ச்சியாக வெளிவந்த செய்திதான் இது. கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி நன்றி மீண்டும் வாருங்கள். நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.
Post a Comment