JULY 21, சென்னை: "திராவிட இளைஞர்கள் ஓரணியில் நிற்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித் துள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: குற்றங்கள், தவறுகள், கொள்ளைகள், கொலைகள் எங்கே நடந்தாலும், அவற்றை யார் நடத்தினாலும், அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்ற இமாலய தவறை, தி.மு.க., என்றைக்கும் செய்ததில்லை.
ஆனால், அ.தி.மு.க., அரசு, அராஜகத்தை ஆபரணமாகவும், அடக்குமுறையை தமது போர்வாளாகவும் கொண்டு செயல்படுகிறது. எதிர்க் கட்சிகளை, குறிப்பாக தி.மு.க.,வினர் குற்றம் செய்யாதிருந்தாலும், அவர்களை சகட்டுமேனிக்கு குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தவும், சட்டத்தின் பெயரைச் சொல்லி சவுக்கடி கொடுக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.
மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் என, எல்லோரிட மிருந்தும் அவர்களை பிரித்து தனிமைப்படுத்தும் காட்சிகளையும் நித்தமும் நாம் காண்கிறோம். தான் நினைத்தபடியெல்லாம் திட்டங்களை அறிவித்து, பள்ளி மாணவர்கள் எள்ளி நகையாட, எல்லா அறிவிப்புகளுமே நீதிமன்றத்தில் தூள் தூளாக நொறுங்கிப் போவது கண்டு, ஆளுங்கட்சியினர் எரிச்சல் அடைந்துள்ளனர்.
அந்த எரிச்சலும் எதிர்க்கட்சியினர் மீது காட்டப்படுகிறது. "பழைய கள், புதிய மொந்தை' என்ற பழமொழிக்கேற்ப, அ.தி.மு.க., அரசின் அராஜக ஆட்டம் மீண்டும் தொடர்கிறது. இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. இதை எதிர்த்து போராட, திராவிட இளைஞர்கள் ஓரணியில் நிற்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சிந்திக்கவும்: உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான் என்கிற பல மொழிக்க ஏற்ப கருணாநிதியின் ஊழல் ஆட்சி, குடும்ப அரசியல் ஒழிந்து இருக்கிறது. திமுக ரவுடிகளை, அவர்கள் கட்சிகாரர்கள் செய்த ஊழல்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மனோகராவில் வசனம் எழுதியது மாதிரி ஒரு அறிக்கை விடுகிறார் கருணாநிதி. ஆட்சி மாறினால் பழைய ஆட்சியாளர்கள் செய்த ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போக வேண்டும் என்று மிஸ்டர் கிளீன் கருணாநிதி சொல்கிறார் போல இருக்கிறது.
No comments:
Post a Comment