JULY 21, அமெரிக்கா: சிறிலங்கா அரசுக்கு சர்வதேச மட்டத்தில் கடும் நெருக்கடியைக் தோற்று வித்துவரும் சேனல் -4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைகளம் ஆவணப்படம், அமெரிக்க கொங்கிரஸ் Capitol Hill மண்டபத்தில் திரையிடப்பட்டது.
Human Rights Watch, Amnesty International-USA, The International Crisis Group, And Open Society Foundations * ஆகிய சர்வதேச அமைப்புக்களின் கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அமெரிக்க அரசியல் பிரதிநிதிகள், கல்வி யாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டளர்கள், அரசியல் அறிவியல் பீட பல்கலைக் கழக மாணவர்களோடு உள்ளுர் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளான சான் சுந்தரம், பொன்னுத்துரை, பிரபாகரன் ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் மனித உரிமை அமைப்பின் இணைத் தலைவருமாகிய *Jim Mc Govern* அவர்கள், ஆவணப்படம் குறித்ததான அறிமுக உரையை வழங்கினார். குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் பொறுப்பு கூற வைக்கும் சுந்திரமான விசாரணைகளுக்கு போதுமான வலுமிக்க ஆதரமாக, இந்த ஆவணப்படம் இருப்பதாக கருத்துரைத்த அவர்கள், சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூற தவறின் அனைத்துலக சமூகமே இதற்கு பதிலளிக்க வேண்டுமென Jim McGovern தெரிவித்தார்.
இந்நிகழ்வவு குறித்து கருத்துரைத்த நா.த.அரசாங்கப் பிரதிநிதி சான் சுந்தரம் அவர்கள், காங்கிரஸ் சபையின் மூத்த உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் என பல உயர்மட்ட பிரதிநிதிகளால் நிறைந்திருந்த மண்டபத்தில், ஆவணப்பட திரையிடலின் போது, சூழ்ந்திருந்த ஆழ்ந்த அமைதிக்குள், விம்மிய அழுகைச் சத்தங்களை கேட்ககூடியதாக இருந்ததென குறிப்பிட்டார்.
இதேவேளை, சிறிலங்கா தூதரக அதிகாரிகள் மற்றும் பௌத்த பிக்குகளும் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்ததோடு, உண்மைக்கு புறம்பான கருத்துக் களையும், கேள்விகளையும் முன்வைத்து, நிகழ்வை திசைதிருப்ப முனைந்த போதும், அது சாத்தியமற்றுப் போனதாக, சான் சுந்தரம் அவர்கள் தெரிவித்தார். ஆவணப்பட திரையிடலைத் தொடர்ந்து, பிரநிதிகளின் தலைமையில் கருத்துப்பரிமாற்றமும் இடம்பெற்றிருந்தது.
No comments:
Post a Comment