JULY 10, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நாம் தமிழர் இயக்க பொதுக்கூட்டம் நடந்தது. இயக்கத்தின் தலைவர் சீமான் பேசும்போது, அடிமைகளாக வாழ்வதை விட சுதந்திரமாக சாகலாம். மாநிலங்களுக் கிடையேயான நதிநீர் பிரச்சனைகளில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
தமிழகத்தின் ஆற்றின் நீரை மீட்க, கேரள அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டால் நதிநீர் பிரச்சனை சுமூகமாக முடியும். கர்நாடகாவில் எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற ஒற்றுமையை கடைப்பிடிக்கின்றனர். தமிழனை தமிழன் தான் ஆள வேண்டும். நமது முன்னோர்களின் சொத்தான கச்சத்தீவை மீட்க பதவியை தூக்கி எறிந்து அரசியல்வாதிகள் போராட வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தட்டிக்கேட்க ஆளில்லை. ஈழ விடுதலைக்கு அறிவு ஆயுதம் ஏந்தி போராடுவோம். உணர்வு, கடமை, கற்பனையை எந்த நாடும் மூடிவைக்க முடியாது. எவராலும் தடுக்க முடியாது. சிறைக்கு ஒரு முறை சென்று வந்தால் பொடா, தடா, தூக்கு ஆகிவற்றின் அச்சம் தீரும் என்ற பெரியார் கூற்றுகளை நினைத்து செயல்படுவோம்.
ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிய முதல்வர் ஜெயலலிதாவை தமிழர்கள் பாராட்ட வேண்டும். இலங்கையர்களால் தமிழன் சாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment