May 18, எதிர்காலத்தில் இந்தியா மற்றும் சீன மாணவர்களின் போட்டியைச் சமாளிக்கும் அளவுக்கு அமெரிக்க மாணவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அமெரிக்காவின் டென்னஸ்ஸீ மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் கல்லூரி மாணவர்களுடன் உரையாடியபோது ஒபாமா இக்ருத்தைத் தெரிவித்தார்.
அமெரிக்க மாணவர்கள் இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும். எதிர்காலத்தில் போட்டிகள் இன்னும் கடுமையாக இருக்கும்.
இந்தியாவிலும், சீனாவிலும் மாணவர்கள் கடினமாக உழைத்து முன்னேறி வருகின்றனர். எனவே தங்களது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
இந்திய, சீன மாணவர்கள் சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் படிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர். தங்களது இலக்கை எட்டுவதற்காகக் கடினமாக உழைக்கின்றனர்.
இப்போது நாம் உலகமயமாக்கல் சூழலில் உள்ளோம். இந்த உலகில் வலிமையானதுதான் மிஞ்சும். திறமைபடைத்தவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்புகள் கிடைக்கும். இதை அமெரிக்க மாணவர்கள் உணர வேண்டும்.
படிப்பை முடித்துவிட்டு நீங்கள் வேலை தேடச் செல்லும்போது இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வந்துள்ள திறமைமிகுந்த மாணவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு அனைத்து அமெரிக்க மாணவர்களும் தயாராக வேண்டும்.
வெறுமனே ஒரு சில அமெரிக்க மாணவர்கள் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றாக வேண்டும். மாணவர்கள் வெறும் படிப்புடன் நின்றுவிடாமல் பட்டயப் படிப்போ அல்லது தொழில் படிப்போ கூடுதலாக கற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது. இவையில்லாமல் வெற்றி பெற முடியாது. போட்டிகளை எதிர்கொள்வதும் கடினம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment