May 6, டெல்லி: 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் கனிமொழி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜரானார்.கனிமொழி சார்பாக பிரபல கிரிமினல் வழக்ககறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடி வருகிறார்.
அவர் கனிமொழிக்கு முன் ஜாமீன் கேட்டு வாதம் செய்து வருகிறார். அவர் கனிமொழி தற்போது எம்.பியாக இருக்கிறார்.
மேலும் அவர் ஒரு பெண். இது மட்டுமல்ல, கலைஞர் டிவியில் அவருக்கு 20 சதவிகிதம் தான் பங்கு இருக்கிறது.
இவர் பங்குதாரராக இருந்தாலும் கலைஞர் டிவி நிர்வாகத்தை இவர் கவனிப்பதில்லை. நிர்வாகத்தின் முழு பொருப்பையும் சரத்குமாரே கவனித்து வருகிறார்.
கலைஞர் டிவியின் நிர்வாக பொருப்பை ஏற்றிருந்த கனிமொழி 2 மாதத்திலேயே அந்த பொருப்பில் இருந்து விலகிவிட்டார். அவர் வெறும் பங்குதாரர் மட்டுமே.
ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. முழுக்க முழுக்க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாதான் பொருப்பு. எனவே, கனிமொழியை இந்த வழக்கில் கைது செய்யக்கூடாது என்று வாதிட்டு வருகிறார்.

No comments:
Post a Comment