May 9, 2011

மேற்குவங்க தேர்தல்!! இறுதிகட்ட வாக்கு பதிவு!!

கொல்கத்தா, மே 10: மேற்கு வங்க மாநிலத்தில் இறுதி கட்ட வாக்குப் பதிவு மே 10 செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

மொத்தம் 14 தொகுதிகளில் நடைபெறும் இந்த வாக்குப் பதிவில் சுமார் 26 லட்சத்து 57 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.

இதில் ஏற்கெனவே 5 கட்டங்களாக 280 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு முடிந்த நிலையில் மீதம் உள்ள 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த மேற்கு மேதினிப்பூர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கும் இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு 700 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களில் கடந்த மாதமே தேர்தல் முடிந்துவிட்டது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் முற்றிலும் நிறைவடைந்த பின்னரே வாக்கு எண்ணிக்கையை தொடங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

வருகிற மே10 ல் தேர்தல் முழுவதும் நிறைவடைவதால் வரும் 13-ம் தேதி தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அனைத்து மாநிலங்களிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் தேர்தல் நடத்தப்பட்டதால் அன்று பிற்பகலில் அனைத்து முடிவுகளும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

சண்முககுமார் said...

தங்கள் பதிவை இணைக்க தமிழ் திரட்டிகளில் முதன்மையான திரட்டியில் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்
http://tamilthirati.corank.com