May 18, தமிழக சட்டப்பேரவைக் கட்டடத்தை மாற்றக் கூடாது என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது.
மதிமுகவின் அரசியல் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசின் தலைமைச் செயலகமும், சட்டமன்றமும் இயங்குவதற்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களும் வளாகங்களும், அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் செய்யப்பட்டது.
தொடக்கத்தில் கூறப்பட்ட மதிப்பீட்டுத் தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவீட்டுத் தொகை காட்டப்பட்டதும் மிகத் தவறானது.
எனினும், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட, மக்களுக்குச் சொந்தமான கட்டடங்களை நிராகரித்து விட்டு, ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே சட்டமன்றமும், தலைமைச்
செயலகமும் இயங்கிட புதிய அரசு முடிவு செய்திருப்பது தவறான செயல் ஆகும்.
அப்படியானால் முந்தைய அரசால் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், மேம்பாலங்கள், நீதிமன்றக் கட்டடங்கள் இவற்றையெல்லாம், புதிய அரசு பயன்படுத்தாது விட்டுவிடுமா? என்ற கேள்வி எழுகிறது.
எனவே, சட்டமன்றத்தை மாற்றுவது ஏற்பு உடையது அல்ல; மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்திலேயே சட்டமன்றம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இவ்வாறு மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
விடுதலைப்புலிகளின் ஏவல் நாய்க்கு இந்தியாவின் விசயத்தில் தலையிட எந்த உரிமையும் இல்ல..
தயவுசெய்து முகவரி இழந்து அனாதையாய் நிறுக்கும் தேச துரோகி வைக்கோவை பொருட்படுத்தி அவனை பிரபலப்படுத்தவேண்டாம்.அவனைபோன்று சீமான், நெடுமாறன் போன்ற விடுதலைப்புலிகள் என்ற பயங்கவாதிகளின் அடிவருடிகளை யாழ்பாணத்துக்கு நாடு கடத்தினால் இந்தியாவில் பயங்கவாத செயல்கள் பெருமளவு குறையும்
Post a Comment