Apr 11, 2011

ஈழ போராட்டத்தை நசுக்கிய!! கருணாநிதி!! கனிமொழி!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா.நடேசன் கனிமொழி எம்.பி.க்கு பின்வருமாறு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.“

அன்புடன் சகோதரி கனிமொழிக்கு,

தற்போது இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் கொண்டிருக்கின்றனர். நாம் நீண்டகாலமாகவே யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றோம். எமது அவலங்களை போக்குவதற்காகவே நாம் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

ஆனால் சிங்கள அரசு யுத்தத்தை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றது. சிங்கள அரசின் அதிமுக்கிய மூத்த அமைச்சர்கள் இந்திய அரசின் உதவியினாலேயே தாம் இந்த யுத்தத்தை வென்றுகொண்டிருப்பதாக பகிரங்கமாக அறிவித்த வண்ணம் உள்ளனர்.

இது எமக்கு மிகுந்த வேதனையை தருகின்றது. இந்த நேரத்திலாவது நீங்களும் அப்பாவும் சேர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி யுத்த நிறுத்தத்தை கொண்டுவந்தால் எமது மக்களை காப்பாற்றலாம். நிபந்தனையற்ற யுத்தநிறுத்தமே எதிர்காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைக்கும் நிரந்தர சமாதானத்திற்கும் வழிவகுக்கும்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன்.

நன்றி.

என்றும் உங்கள் அன்பான,

சகோதரன் பா.நடேசன்"

சிந்திக்கவும்: கருணாநிதி, தன் பதவியை பாதுகாப்பதற்காக, மத்திய அரசின் கூட்டுச் சதிக்கு திரைமறைவில் உறுதுணையாக இருந்தார். போரை நிறுத்தவோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ கடைசிவரை, கருணாநிதி நடவடிக்கை எடுக்காமல் நாடகம் ஆடினார். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதில், கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்

1 comment:

Anonymous said...

நாம் நம்பக்கூடாத சேரக் கூடாத குள்ளநரிகளை நம்பியதால் வந்த விணையே இவைகள். இனி அவைகளைப் பேசிப் பயனில்லை. இனியாவது இந்த வல்லூருகளை நம்பி மோசம் போகதிருப்போமாக. இந்த குள்ளநரிகள் தமது குடும்பத்திற்காக வாழ்ந்தவர்களே ஒழிய தம் இனத்திற்காக அல்ல. இனத்தையெ விற்று உண்ணும் கேடு கெட்டவர்கள். இந்த தேர்தலுடன் தமிழக தமிழர்களின் நிலையையும் ஈழத்தமிழா நாம் புரிந்து கொள்ள முடியும்.