ஏப்ரல் 12, ஆட்சி அமைக்கும் அளவுக்கு அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என, திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற திமுக தேர்தல் பொதுக்கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.
இறுதிகட்ட பிரசாரத்தை திருவாரூர் கீழவீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் நிறைவு செய்து பேசினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். மக்களுக்கு நிறைய செய்து உள்ளோம். ஆட்சி அமைக்கும் அளவுக்கு அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன் என்று கூறினார்.
சிந்திக்கவும்: முதலில் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று சொன்னார். இப்போது ஆட்சி அமைக்கும் அளவுக்கு என்று கூறுகிறார். தோல்வி பயம் வந்து விட்டது.
மொத்தத்தில் தமிழக மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை எதிர் பார்கிறார்கள் என்பது நிச்சயம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Chornthu vitaatheerkal ena chonna ammaavai enna cholvathu?
Post a Comment