Apr 10, 2011

தேர்தலில் பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்!!

ஏப்ரல் 11, நாம் தமிழர் இயக்கம் சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ’காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை தோற்கடிக்கும் லட்சிய உணர்வில் போராடி வருகிறோம் என சீமான் பேசினார்.‘

இது எங்கள் மரபணுவில் உள்ள கோபம். ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரே மேற்கொண்ட உண்ணா விரதத்திற்கு கிடைத்த ஆதரவு மூலம் இந்தியர்கள் ஊழலுக்கு எதிராக இருப்பதை காண முடிகிறது.

இதுவரை தேர்தல் தேதியை மட்டும் அறிவித்து விட்டு செல்வதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலையாக இருந்தது. ஆனால் இந்தமுறை தேர்தல் ஆணையம் பணத்தை கொடுக்க வில்லை. இப்போதுள்ள இதே நேர்மை, உண்மை மே13-ந் தேதி வரை தொடர வேண்டும்.

108 ஆம்புலன்ஸ், குப்பை லாரி, சேட்டு, மார்வாடி மூலம் பணம் கொடுக்கும் பணியை தொடங்கியுள்ளனர். அது உங்கள் பணம், அதை வாங்கி கொள்ளுங்கள், ஆனால் உங்களிடம் பணம் கொடுப்பவர்களின் கையை பிடித்து கேளுங்கள் இந்த பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று.

63 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து வரலாற்றில் பதியவைக்கும் மிகப்பெரிய வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் இத்தேர்தலில் எழுதப்போகும் தீர்ப்பை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

உலகில் சின்னஞ்சிறு நாடுகள் கூட தடையில்லா மின்சாரத்தை அளிக்கும் போது தமிழ்நாட்டில் மின்சாரமின்றி இருளில் இருக்கும் நிலை உள்ளது. காங்கிரஸ் அரசின் சாதனையே நாட்டை ஊழலில் தலைசிறந்த நாடாக மாற்றியது தான்’’ என்று பேசினார்.

No comments: