நாகர்கோவில், ஏப். 28-பிரமோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை நாகர்கோவிலில, இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரமோஸ் ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. உலகில் மிக வேகமாக செல்லும் ஏவுகணை இதுதான். அந்த பெருமை நமக்கு கிடைத்துள்ளது.
பிரமோஸ் ஏவுகணை ஒரு மணி நேரத்திற்கு 3300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இதன் திறனை மேலும் அதிகரிப்பதற்காக ஆராய்ச்சி செய்து வருகிறோம். இப்போது பிரமோஸ் ஏவுகணை தரைப்படையிலும், கப்பல் படையிலும் பயன்படுத்தப்படுகிறது.
விமானப்படையில் பயன்படுத்துவதற்கு முயற்சி நடந்து வருகிறது. 2012ல் விமானப்படையில் பிரமோஸ் ஏவுகணை பயன்படுத்தப்படும். நவீன நுட்பங்களுடன் பிரமோஸ் ஏவுகணையை பயன்படுத்துவதற்காக நானோ டெக்னாலஜி புகுத்தப்படுகிறது.
இதன் மூலமாக பிரமோஸ் ஏவுகணையை கண்ணில் தெரியாத அளவிற்கு செலுத்த முடியும். குறிப்பிட்ட இலக்கை பிரமோஸ் ஏவுகணையே முடிவு செய்து தாக்கும் தன்மை கொண்டதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment