April 29, வாஷிங்டன்: அமெரிக்காவின் தென் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கடும் சூறாவளி புயல் தாக்கி, அலபாமா, அர்கன்சாஸ், கென்டுகி, மிசிசிப்பி, மிசோரி, டென்னிசீ, டெக்காஸ் ஆகிய மாநிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
இந்த கடும் சூறாவழி மற்றும் புயல் மழைக்கு இதுவரை 300 பேர் பலியாகிவிட்டனர். மேலும் தொடர்ந்து வீசும் புயலால் பலியாவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் ஆபாயம் உள்ளது.
பலத்த சுழல் காற்றுடன் பெய்யும் பெருமழை காரணமாக கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. இது டோர்னாடோ என்று அழைக்கப்படும் சுற்றிச்சுழலும் சூராவழிக்காற்று.
இது போன்ற புயல் அமெரிக்காவில் அவ்வப்போது வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள், வீடுகள், வீடுகளில் உள்ள வாகனங்கள் மற்றும் பொருட்கள் மற்றும் ஆட்கள் யாவரும் காற்றுச்சுழலில் உறிஞ்சப்பட்டு தூக்கி வீசப்பட்டு மோதி சிதறும் அதிர்ச்சியான நிலை நிலவுகிறது.
குறிப்பாக இந்த கொடும் புயல் மற்றும் சூராவழியில் அதிகம் பாதிக்கப்பட்டது அலபாமா மாநிலம்தான். இங்கு மட்டும் சுமார் 162 பேர் உயிரிழந்து மேலும் 150 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் அருகில் உள்ளா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அலபாமாவில் துஸ்காலீ சியா என்னும் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, தகவல் தொடர்பு, மின்சாரம் மற்றும் குடிநீரின்றி மக்கள் தவிப்புக்குலாகின்றனர். இதே நிலை தான் சூறாவளி புயல் பாதித்த ஜார்ஜியா, மிசிசிப்பி மாகாணங்களிலும் உள்ளது.
புயல் மழைக்கு இதுவரை 300பேர் பலியாகி உள்ளனர். இன்னும் தொடர்ந்து புயல் வீசுவதால் சாவு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. இதற்கிடையே புயல் பாதித்த அலபாமா, ஆர்கன் சாஸ் கென்டுகி, மிசிசிப்பி, மிசோரி, டென்னிசீ, ஒகல கோமா ஆகிய 6 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மீட்பு பணிகளில் தேசிய பாதுகாப்பு படையினர் ஈடுபட வரும்படி அம்மாகாண கவர்னர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையே புயல் பாதித்த மாகாணங்களில் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தும் படி அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
அதை தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விர்ஜீனியா, மேரிலேண்டு, அட்லாண்டிக் உள்ளிட்ட 21 கடற்கரை மாகாணங்களிலும் தட்பவெப்ப நிலை மோசமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment