இணையதளம் மூலம் சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகளுக்கு ஆளாக்கிய 184 பேரை பல்வேறு நாடுகளில் இருந்து பொலிசார் கைது செய்தனர். மேலும் 230 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் அமைப்பான யூரோபோல் தெரிவித்துள்ளது.
இந்த வலையமைப்புக்கு 30 நாடுகளில் தொடர்பு இருந்ததாகவும் சுமார் 70,000 பேர் அங்கம் வகிப்பதாகவும் யூரோபோல் தெரிவித்துள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட இத்தகைய மிகப்பெரிய சிறுவர் துஷ்பிரயோக முறியடிப்பு நடவடிக்கை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. 670 சந்தேக நபர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
184 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். 230 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளனர் என யூரோபோல் பணிப்பாளர் ரொப் வெய்ன்ரைட் நெதர்லாந்தின் ஹேக் நகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் கூறினார். பிரிட்டனில் 121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து 60 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment