பிப் 19, மதுரை: திமுக கூட்டணியில் பாமக சேர்ந்திருப்பது மூழ்கும் கப்பலில் ஏறியிருப்பதற்கு சமம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர், நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இந்தக் கூட்டணியில் போய் பாமக சேர்ந்திருப்பது, மூழ்கும் கப்பலில் ஏறியிருப்பதற்குச் சமம். டாஸ்மாக் கடைகளைத் திறந்ததைத் தவிர வேறு எந்த உருப்படியான வேலையையும் திமுக செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய டாக்டர் ராமதாஸ் எப்படி திமுக கூட்டணியில் சேர்ந்தார். தனது கடந்த கால பேச்சுக்களுக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறிவருகிறார். இலங்கையைத் தவிர யாரும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பே இல்லை. இந்தப் பிரச்சனயை ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா எடுத்துச் செல்ல வேண்டும். சர்வதேச கடல் விதிகளுக்கு மாறாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இலங்கை அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா குற்றம் சுமத்த முடியும். ஆனால், அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன் என்று தெரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அரசியல் ஒரு சாக்கடை என்பதற்கு இது ஒரு உதாரணம் !!!
தேங்க்ஸ் டு புதிய தென்றல் for போஸ்ட்
thank you somuch for your comment.
Post a Comment