
பின்னர் பார்வதி அம்மாள் உருவ படத்தை ஏந்தியபடி டி.டி.கே.சாலையில் ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து திருமாவளவன், ரவிக்குமார் எம்.எல்.ஏ. மாநில பொருளாளர் முகமது யூசுப், பொது செயலாளர் கலைக்கோட்டுதயம், வன்னியரசு, வீரமுத்து, இளஞ்செழியன், சைதை பாலாஜி, கபிலன், இரா.செல்வம், பொன்னிவளவன், கமலக் கண்ணன் உள்பட 800 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை வல்வெட்டித்துறையில் வைக்கப்பட்டுள்ள பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவே கொழும்பு சென்றேன். ஆனால் இலங்கை அரசு வல்வெட்டித்துறைக்கு செல்ல அனுமதி மறுத்துவிட்டது. வேறுவழியின்றி திரும்பி வந்தேன். நான் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவிடாமல் இலங்கை அரசு தடுத்ததற்கு மத்திய அரசுதான் காரணம். ஒரு எம்.பி.யை திருப்பி அனுப்பியது வெட்கக்கேடானது.
எனவே மத்திய அரசு இலங்கை அரசை கண்டிக்க வேண்டும். அதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் போராட்டம் தொடரும். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூட வேண்டும். என்னை திருப்பி அனுப்பியதன் மூலம் இந்தியாவை இலங்கை அரசு அவமதித்துள்ளது. இது பற்றி நான் பாராளுமன்றத்தில் விளக்கம் கேட்டு கேள்வி எழுப்புவேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார். திருமாவளவனை இலங்கை அரசு திருப்பி அனுப்பியதை கண்டித்து விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 25 பேர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
2 comments:
திருமாவளவன் is a mad guy..dont support him..
மொத்த பாராளுமன்ற கூட்டங்களில் மிக குறைந்த அளவே பங்கெடுத்த (5%) மேசமான எ.பி.இவர். தேவை இல்லாமல் ஆர்ப்பாட்டம் அராஜகம் செய்து தன இருப்பை நிலை நிறுத்த முயலும் ஒரு மோசமான மனிதர். தான் சார்ந்த அந்த மக்களுக்கு இன்று வரை என்ன செய்தார் இவர்? இவர் ஒரு சமூக விரோதி மட்டுமே.அழித்து ஒழிக்கப்பட வேண்டிய நபர்களில் ஒருவர்.
Post a Comment