Feb 20, 2011
அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்!!
சென்னை, பிப்.20- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தகவல் அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலர் பி.அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது மற்றும் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை இன்று நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், மனிதநேய மக்கள் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்நிகழ்வின் போது, அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இராமரின் காலணி என்று கூறி நாடு முழுவதும் பா.ஜ.க. வலம் வந்த போது மே. வங்கம் முதற்கொண்டு சில மாநிலங்கள் தடைவிதித்தன. அப்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த இந்த அம்மையார் தான் முதன் முதலில் ஆதரவு தந்து தமிழகத்தில் அவர்களுக்கு தளம் தந்தவர். இன்று ஓட்டு வாங்கும் அரசியல் இயக்கத்தில் நுழைந்த எவருமே கொள்கை அளவில் கூட்டணி அமைப்பதில்லை. தங்கள் அணியின் பலம் காண்பிக்கவோ அல்லது சுய இலாபம் கருதியோ இது போன்ற தலைவர்களிடம் சரணாகதி அடைவர். இதற்கு நம் தேர்தல் முறையில் சீர் திருத்தம் தேவை. தனித்து மாநிலம் முழுவது நிற்பினும், அவர்கள் வாங்கும் வாக்கின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் கொள்கையாளர்களும் சொள்ளையர்களாய் மாற வழி வகித்திடும்.
Post a Comment