Feb 7, 2011

கிரிக்கெட் உலகின் டாப் 10 விக்கெட் கீப்பர்ஸ்!!!

உலகக் கோப்பை கிரிக்கெட்க்கு இன்னும் 11 நாள்கள் உள்ள நிலையில் டாப் 10 விக்கெட் கீப்பர்ஸ் யார்? என்று பார்போம். உலகக் கோப்பையில் அதிகமுறை எதிரணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர்களின் வரிசையில்....

1) ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் முதலிடத்தில் உள்ளார். மூன்று உலகக் கோப்பைகளில் 31 ஆட்டங்களில் விளையாடியுள்ள கில்கிறிஸ்ட், 52 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதில் 45 கேட்சுகளும், 7 ஸ்டம்பிங்குகளும் அடங்கும்.

2) இவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் குமார் சங்ககரா இரண்டாவது இடத்தில் உள்ளார். இரண்டு உலகக் கோப்பைகளில் 21 ஆட்டங்களில் விளையாடி 32 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதில் 26 கேட்சுகளும், 6 ஸ்டம்பிங்குகளும் அடங்கும்.

3) மூன்று உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் 3-வது இடத்தில் உள்ளார். 25 ஆட்டங்களில் விளையாடி 31 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஸ்டம்பிங் முறையில் யாரையும் வீழ்த்தவில்லை.

4) பாகிஸ்தானின் மொயின் கான் 4-வது இடத்தில் உள்ளார். மூன்று உலகக் கோப்பையில் பங்கேற்று 20 ஆட்டங்களில் விளையாடி 30 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதில் 23 கேட்சுகளும், 7 ஸ்டம்பிங்குகளும் அடங்கும்.

5) இரண்டு உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடியுள்ள நியூஸிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம், 17 ஆட்டங்களில் 23 பேரை ஆட்டமிழக்கச் செய்து 5-வது இடத்தில் உள்ளார். இதில் 22 கேட்சுகளும், 1 ஸ்டம்பிங்கும் அடங்கும்.

6) இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனான அலெக்ஸ் ஸ்டீவார்ட் 6-வது இடத்தில் உள்ளார். 4 உலகக் கோப்பைகளில் 25 ஆட்டங்களில் விளையாடி 23 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதில் 21 கேட்சுகளும், 2 ஸ்டம்பிங்குகளும் அடங்கும்.

7) இரண்டு உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடியுள்ள மேற்கிந்தியத் தீவுகளின் ரிட்லே ஜேக்கப்ஸ் 7-வது இடத்தில் உள்ளார். இவர் 11 ஆட்டங்களில் விளையாடி 22 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதில் 21 கேட்சுகளும், 1 ஸ்டம்பிங்கும் அடங்கும்.

8) பாகிஸ்தானின் வாசிம் பாரி, மூன்று உலகக் கோப்பைகளில் 14 ஆட்டங்களில் விளையாடி 22 பேரை ஆட்டமிழக்கச் செய்து 8-வது இடத்தில் உள்ளார். இதில் 18 கேட்சுகளும், 4 ஸ்டம்பிங்குகளும் அடங்கும்.

9) ஆஸ்திரேலியாவின் இயன் கீலி 9-வது இடத்தில் உள்ளார். இரண்டு உலகக் கோப்பைகளில் 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், 21 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதில் 18 கேட்சுகளும், 3 ஸ்டம்பிங்குகளும் அடங்கும்.

10) மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜெப் துஜான் இரண்டு உலகக் கோப்பைகளில் 14 ஆட்டங்களில் விளையாடி 20 பேரை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் 10-வது இடத்தில் உள்ளார். இதில் 19 கேட்சுகளும், 1 ஸ்டம்பிங்கும் அடங்கும்

No comments: