Dec 13, 2010

ஊழல் குறித்து புகார் செய்ய தனி இணைய தளம்.

ஊழல் குறித்து புகார் செய்ய தனி இணையதளத்தை (Vig-eye) மத்திய கண்காணிப்பு ஆணையகம் தொடங்கி உள்ளது. இதில் ஊழல், லஞ்சம் தொடர்பான ‌வீடியோ, ஆடியோ பதிவுகளுடன் புகார் செய்யும் வசதி உள்ளது.

மேலும் மத்திய கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய இந்த இணையதளம் வகை செய்கிறது.

ஊழல், லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்து கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய முடியும். இந்த இணையத்தில் பதிவு செய்யப்படும் புகார் தனியாக அடையாளமிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

கண்காணிப்பு ஆணையம் தொடர்பான விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்த இணையதளத்தை மத்திய கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் நே‌ற்று தொடங்கி வைத்துப் பேசினார்.

கண்காணிப்பு அமைப்பை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊழல் தடுப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கண்காணிப்பு ஆணையம் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளது. இந்த விழிப்புணர்வு பிரசாரம் மூலம் ஊழலை மக்கள் சகித்துக் கொள்ளாமல் அது குறித்து புகார் செய்ய முன்வருவது அதிகரிக்கும்'' என்றார் தாம‌ஸ்.

மத்திய கண்காணிப்பு ஆணைய இணையதளமான www.cvc.nic.in ல் 'விக்-ஐ' குறித்த தகவல்களைப் பெற முடியும்.

3 comments:

http://rkguru.blogspot.com/ said...

yevvalavo parththuttom ithai parakkamattoma....kalainjar dialog

பொன் மாலை பொழுது said...

Thanks for sharing

விஜய்ஆனந்த் said...

தங்களது ப்ளாக் இல் தலைப்பில் "அநீதிக்கு எதிராக நியாத்தின் குரலாக உங்களை அன்போடு வரவேற்கிறேன்" என்ற வாசகத்தில் (நியாத்தின்) என பிழை உள்ளது அதனை திருத்தி கொள்ளவும் . நன்றி