![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWXqZTZiCijZdnG6X1JPqvkvzA900crRiCLPIoZzgaH6p7UgBpU1UwRL8e4xtTFYJvfgZ2WIRFVvmAi-eQUK5TYhX9OlLnUtJ13_c-T99auGSsblQ4gDMxkdw95orFkkkJgPpdk9eU344/s320/stock-photo-statue-of-liberty-with-a-large-american-flag-in-the-background-13149412.jpg)
ஆனால் ஆச்சர்யம் பாருங்கள் பல இந்தியர்களின் கனவான இந்த H1B-ஐ இன்று வாங்க ஆளில்லாத நிலை! கிட்டத்தட்ட 11000 H1B விசாக்கள், வருடம் முடியும் இந்தத் தருவாயிலும் தேங்கி நிற்பது, அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பெரும் வியப்பைத் தந்துள்ளது. அவர்கள் அனுபவத்தில் இப்படி ஒரு தேக்கம் இதுவே முதல்முறை.
இதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், "இந்த ஆண்டுக்கான H1B விசாவுக்கான கோட்டா 65000. கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது. 2009-ல் கூட டிசம்பர் 21-ம் தேதியே இந்த அளவை எட்டிவிட்டோம். ஆனால் இந்த ஆண்டு இன்னும் 11000 விசாக்கள் வாங்கப்படாமலேயே உள்ளது", எனத் தெரிவித்துள்ளது (இந்த விசாவுக்கான கட்டணம் எக்கச்சக்கம்...வருமானம் போய்விட்ட கவலை அவர்களுக்கு!).
உடனே, தாயகத்தின் மீது அத்தனைப் பாசமா நம்மவர்களுக்கு என யாரும் சிலாகித்துவிட வேண்டாம். இந்த விசாக்கள் தேங்கிக் கிடக்கக் காரணம், அமெரிக்கப் பொருளாதாரத்தின் பரிதாப நி்லைதான். இன்னும் அங்கே வேலை இழப்புகள் நின்றபாடில்லை. பொருளாதார வளர்ச்சி இப்போதும் 3 சதவீதத்தைத் தாண்டவில்லை. இதுவரை உலக போலீஸ்காரனாகத் திகழ்ந்த அமெரிக்கா, விக்கிலீக்ஸ் விவகாரத்தில் உலகின் வில்லனாகப் பார்க்கப்படுகிறது. வெளியில் சொல்லாவிட்டாலும், பல நாடுகள் அமெரிக்க உறவை அளவோடு பேண முயலும் நிலை... முக்கியமாக அமெரிக்காவில் சம்பளம் மிகவும் குறைந்துவிட்டதாம்! இத்தனையும் சேர்த்து, H1B விசாக்களைத் தேங்க வைத்திருக்கிறது. இன்றைய தேதிக்கு, அமெரிக்காவுக்கு ஒரு 'ஆல்டர்நேட்' இருக்குமா என தீவிரமாகத் தேடுகிறார்கள் இந்தியாவின் 'ஹைடெக் அப்பர் மிடில்கிளாஸ் ஆசாமிகள்'!!
No comments:
Post a Comment