Aug 18, 2010

தீவிரவாதிகளான மோடியும், அத்வானியும் வெளியே இருக்க மதானி கைதா?

கேரளா மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், நாடறிந்த அறிஞருமான அப்துந்நாசர் மதானி அவர்கள், பெங்களூரில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் இவருக்கு தொடர்புண்டு என அநியாயமாக பழிபோட்டு சுமார் பத்து ஆண்டுகள் சிறைவாசத்திற்கு தமிழக காவல்துறை வழிவகுத்தது.. இறுதியில் நிரபராதியாக விடுதலையான மதானி அவர்கள் தனது குடும்பத்துடன் சொற்ப காலம் கழிப்பதற்க்குள்ளாக மீண்டும் கர்நாடக போலீஸ் ரூபத்தில் அவரை சிறைக்கதவு தன்னுள் வாங்கிக்கொண்டது.

மதானி அவர்கள் புனிதமிக்க ரமளானில் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் வெடிகுண்டு வழக்கில் மதானி அவர்கள் வழக்கில் ஒருவர்தானே அன்றி முக்கிய குற்றவாளியல்ல. அப்படியிருக்கும் நிலையில், புனித ரமலான் முடிந்த பின்பு கூட கைது செய்திருக்கலாம். ஆனால் அவசர அவரசரமாக, எதோ சர்வதேச தீவிரவாதியை கைது செய்யப்போவது போல் சுமார் எட்டு நாட்கள் கேரளாவில் முகாமிட்டு, பதட்டத்தை ஏற்படுத்தி அதுவும் நீதிமன்றத்தில் சரணடைய சென்றவரை வழிமறித்து தனது காரியத்தை முடித்துள்ளது பெங்களூர் காவல்துறை. உண்மையில் மதானி குற்றவாளியா..? அல்லது நிரபராதியா என்பதை சட்டம் தீர்மானிக்கட்டும். அதே நேரத்தில் மதானி அவர்களின் வெளிப்படையான நடவடிக்கையை வைத்து பார்க்கும்போது அவர் மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும் மனநிலையில்லாதவர் என்பது புலப்படும். அதற்கு சான்றாக ஒரு சம்பவத்தை கூறலாம்.

கடந்த 1992 ஆம் ஆண்டு மதானி சென்ற கார் மீது, ஆர்.எஸ்.எஸ்சை சேர்ந்த சந்திரபாபு என்பவர் தலைமையில் எட்டுபேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் மதானி உள்ளிட்ட நான்கு பேர் படுகாயமுற்றனர். இந்த தாக்குதலில் மதானி அவர்களின் இரண்டு கால்களும் ஒடிந்தன. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மதானி செயற்கை கால்களை பொருத்திக் கொண்டார். பின்னர் இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் எட்டுபேரையும் மதானி அவர்கள் மன்னித்து விடுவதாக கூறியதோடு, அவர்களை விடுவித்துவிடுமாறு நீதிபதியிடம் எழுத்துப் பூர்வமாக வேண்டுகோள் விடுத்தார். தன்னுடைய இரு கால்களை இழந்து ஈஸி சேரில் வலம்வர செய்த பயங்கரவாதிகளை கூட மன்னிக்கும் மனப்பான்மை கொண்ட மதானி, அப்பாவி பொதுமக்களை கொல்லும் வெடிகுண்டு கலாச்சாரத்தில் ஈடுபடுவாரா என்பதை சிந்திக்க வேண்டுகிறோம்.. 'சந்தேகம்' என்பது மிகப்பெரிய நோயாகும். தமிழக காவல்துறையின் சந்தேகம் மதானியின் சுமார் பத்தாண்டுகால இளமையை பறித்து, பல்வேறு நோய்களை அவருக்கு பரிசளித்தது. அதுபோன்ற நிலையை மீண்டும் மதானிக்கு பெங்களூர் காவல்துறையால் வழங்கப்பட்டுவிடாமல் விசாரணை நேர்மையாக நடக்கவேண்டும் என்றும், உண்மைக் குற்றவாளிகள் தப்பவிடப்பட்டு அப்பாவிகள் தண்டிக்கப் பட்டுவிடக்கூடாது என்பதுதான் நீதியை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியனின் ஆசையும் எதிர்பார்ப்புமாகும்.
sinthikka: கடந்த பத்து ஆண்டுகளாக தொடர் குண்டு வெடிப்புகளை நடத்திய ஹிந்து தீவிரவாதிகள் வெளியே இருக்க மாதானி கைது என்பது இந்தியா ஹிந்து நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்பதன் அடையாளம்.

No comments: