சியோல், ஜூலை 24: அமெரிக்கா, தென் கொரியா ஆகிய இரு நாடுகள் மீது அணுகுண்டுகளை வீசி பதிலடி கொடுக்கவும் தயங்கமாட்டோம் என்று வட கொரியா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு கடற்படை ஒத்திகையை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல் தென் கொரியாவுக்கு வருகை தந்துள்ளது.
இந்தக் கப்பல் முழுவதும் போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளன. தென் கொரியாவும் கடல் பகுதியில் போர்க் கப்பலை நிறுத்தியுள்ளது. இரு நாடுகளின் கூட்டு கடற்படை ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) தொடங்குகிறது. தொடர்ந்து அத்துமீறி நடந்துவரும் வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும்வகையில்தான் இரு நாடுகளும் இந்தக் கூட்டு கடற்படை ஒத்திகையை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் வட கொரியா கோபம் அடைந்துள்ளது. அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment