புதுடெல்லி:ராமர் கோயில் விஷயத்தை கொண்டு எல்லா உள்ளமைப்புகள் மூலம் மீண்டும் அச்சுறுத்தவும்,நாட்டில் ஹிந்துத்துவா தீவிரவாதத்திற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தவும் தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., தீர்மானித்துள்ளது. பல்வேறு தீவிரவாத செயல்களுக்காக ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் ஈடுபட்டு இப்பொழுது சிக்கலில் தவிப்பதால்,பிஜேபியிடம் உதவியை நாடியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
இனிவரும் நாட்களில் ராமர் கோயில் விஷயத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், வரும் ஆகஸ்ட் 16 முதல் நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தவிருப்பதாகவும் கூறியுள்ளது.ஆர்.எஸ்.எஸ்.,ன் வருடாந்திர நிகழ்ச்சிகள் குறித்த செயற்குழு இராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டம் தின்வாரி கிராமம், தாதா பகவான் ஆசிரமத்தில் மோஹன் பகவத் தலைமையில் 3 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. 65 பேர் வளர்ச்சிப்பணி குறித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
வெவ்வேறு கிளைகளை சேர்ந்த 160 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பாபர் மஸ்ஜிதை தகர்த்து 18 ஆண்டுகள் கழிந்துவிட்டது,இப்போதுள்ள தலைமுறைக்கு இதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.ஹிந்துத்துவாவின் எதிரிகள் ராமர் கோயில் பற்றி திரித்துக்கூறி கிளர்ச்சி ஏற்படுத்துவதாகவும்,நாட்டின் வளர்ச்சிக்கு சீனா பெரும் அச்சுறுத்தலாக இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாலேகோன்,மக்கா மஸ்ஜித்,அஜ்மீர் குண்டுவெடிப்புகளில் சங் பரிவார அமைப்புகளின் தொடர்பு பற்றி விசாரிப்பது குறித்து முக்கிய தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர். ஜார்கண்ட்,மத்திய பிரதேசத்தின் செயல்வீரர்களிடம் அங்கு ஹிந்துத்துவா தீவிரவாத சூடு தனியும் வரை சற்று அடங்கிப் போகும்படி ஆர்.எஸ்.எஸ்., கேட்டுக்கொண்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment