Jul 14, 2010

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை.

வாஷிங்டன், ஜூலை 14: அமெரிக்காவில் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்த ஹைதராபாதைச் சேர்ந்த அருண் குமார் (26) என்ற மாணவர் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.விர்ஜீனியாவில் உள்ள ஸ்ட்ராட்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பு படித்துவந்தார் அருண் குமார் நரோத். கல்வி செலவுக்காக அவர் அங்குள்ள மளிகை கடை ஒன்றில் காசாளராகப் பகுதிநேரமாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மளிகை கடையில் பணியில் இருக்கும் போது அக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த இரு நபர்கள் அருண் குமாரை சுட்டுவிட்டு, கடையில் அவர் வசம் இருந்த பணத்தை அள்ளிச் சென்றனர்.தலையில் குண்டுதுளைத்த நிலையில் இருந்த அருண் குமார் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து கடையில் பணிபுரியும் சக ஊழியர்கள் போலீஸôருக்கு தகவல் அளித்தனர். உடனே போலீஸôர் விரைந்து வந்து அருண் குமாரின் உடலை மீட்டனர்.இந்த செயலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்

No comments: