சென்னை, ஜூலை 14: இலங்கை அரசை கண்டித்து சென்னையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்ட 300 பேர் தடையை மீறி இலங்கை தூதரகம் நோக்கி புறப்பட்டபோது கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை எதிர்த்து கலவரம் செய்த அந்த நாட்டு அரசை கண்டிப்பதாகக் கூறி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் புதன்கிழமை காலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை தூதரகம் நோக்கி புறப்படுவது சட்டவிரோதமானது என்ற எச்சரிக்கையை மீறி செல்ல முயன்ற பழ. நெடுமாறன், வைகோ, மா. நடராஜன் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment