Jul 16, 2010

எந்தப் படையையும் எதிர்கொள்ளத் தயார்: அரசுக்கு மாவோயிஸ்ட் தலைவர் சவால்.

கொல்கத்தா,​​ ஜூலை 16: அரசு கொண்டு வரும் எந்தப் படையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர் கிஷன்ஜி கூறியுள்ளார்.​ சத்தீஸ்கர்,​​ ஒரிசா,​​ ஜார்க்கண்ட்,​​ மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த கூட்டுப்படையை களம் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது.​ இந்நிலையில் மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை கூறியுள்ளது:

எந்தப் படை வந்தாலும் அவர்களை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்.​ மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் ஆசாத்தை கொன்றதன் மூலம் சமாதான பேச்சுக்குத் தாயரில்லை என்பதை மத்திய அரசு அறிவித்து விட்டது.​ நாட்டில் உள்ள தாதுப் பொருள்களும்,​​ இயற்கை வளங்களும் மக்களுக்குச் சொந்தமானவை.​ இதனை வேறு எவரும் சுரண்ட அனுமதிக்கமாட்டோம்.​ மாவோயிஸ்டுகள் தலைமையில் மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடி வருகின்றனர் என்றார் கிஷன்ஜி.​ அவர் எங்கிருந்து பேசினார் என்பது தெரியவரவில்லை.

No comments: