குவாஹாட்டி, ஜூலை 16: அசாம் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் பாலம் சேதமடைந்தது.உதல்கிரி மாவட்டத்திலுள்ள ரயில்வே பாலத்தின் கீழ் காலை வேளையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பாலம், ரயில்வே தண்டவாளங்கள் சேதமடைந்தன.இதைத் தொடர்ந்து அந்தத் தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேசிய போடோலாந்து விடுதலை முன்னணியின் பிரிவினைவாத அமைப்பினர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதேபோல பேன்சி பஜார் பகுதியில் சாந்தி மந்தர் பகுதியில் ஒரு பையில் குண்டு வைக்கப்பட்டிருந்தது வியாழக்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீஸôர் செயலிழக்க முயன்றபோது அந்த குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை. இந்த சம்பவங்கள் தொடர்பாக மணிப்பூர் மக்கள் சுதந்திர யுத்தக்குழுவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment