May 24, 2010

உள்நாட்டு பாதுகாப்புக்கு நக்சல்கள் மிகப்பெரிய அச்சுறுத்தல்: பிரதமர் மன்மோகன் சிங்.

புதுடில்லி : "உள்நாட்டு பாதுகாப்புக்கு நக்சலைட்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்கு, மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அளித்த பேட்டியின் போது, நக்சலைட் நடவடிக்கை பற்றி கூறியதாவது: உள்நாட்டு பாதுகாப்புக்கு நக்சலைட்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாகவே இதை கூறி வருகிறேன். அனைத்து மாநில முதல்வர்களிடமும் இது குறித்து தெரிவித்துள்ளேன். நக்சலைட்களை கட்டுப்படுத்துவதற்கு, மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

அதே நேரத்தில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கடமை. நக்சல்களைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லை.நக்சலைட் களை அரசு குறைத்து மதிப்பிடுவதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

No comments: