மங்களூர்:இந்தியாவில் முஸ்லிம் சமூகத்திற்கு பிற்படுத்தப்பட்ட நிலையிலிருந்து விடுதலைப் பெற்று தருவதில் முஸ்லிம் சமுதாய தலைமைத்துவம் தோல்வியடைந்துவிட்டது என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் இ.அபூபக்கர் சாஹிப் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு ரங்கநாத் மிஷ்ரா கமிஷனின் சிபாரிசுகளின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கர்நாடகா மாநிலம் மங்களூரில் நேரு மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் அவர்.
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் ஒடுக்கப்பட்ட சமூகமான முஸ்லிம்கள் உள்ளிட்ட சமூகங்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் களமிறங்கியது முலாயாம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோராவார்.
முஸ்லிம் சமுதாயத்தைக்குறித்து அவர்கள் காட்டிய அக்கறையைக் கூட முஸ்லிம் தலைவர்கள் காட்டவில்லை. முஸ்லிம்களின் ஒடுக்கப்பட்ட சூழலைக் குறித்து ஆராய கமிஷன்களையும், கமிட்டிகளையும் நியமிக்கும் அரசுகள் அக்கமிஷன்களின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதில் அக்கறை காண்பிப்பதில்லை. முஸ்லிம்களுக்காக ஏதோ செய்தோம் என்பதைக் காண்பிப்பதது தான் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நோக்கமாகும்.
முஸ்லிம்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், சமூக சேவகர் தீக்கய்யா, ஃபாதர் வில்லியம் மார்டிஸ் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment