Feb 8, 2010

ஆஸ்திரேலியாவில் தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய போலீஸ் கேவலமான யோசனை.


மெல்போர்ன்,​ பிப்.7: ஏழை போல் நடியுங்கள்;​ பணக்காரர்களைப் போல் காட்டிக்கொள்ளாதீர்கள்:​ இப்படி நடந்து கொண்டாலே உங்கள் மீது யாரும் கையை வைக்கமாட்டார்கள் என்று இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய தலைமை போலீஸ் அதிகாரி சைமன் ஓவர்லேண்ட் யோசனை தெரிவித்துள்ளார்.

சைமன் ஓவர்லேண்ட்டின் இந்த யோசனையை பிரதமர் ஜான் பிரம்பி வரவேற்றுள்ளார்.​ வெளிநாட்டு மாணவர்கள் சைமனின் யோசனையை பின்பற்றினாலே சமூக விரோதிகளிடம் இருந்து தப்பித்துவிடலாம் என்று அவர் கூறியுள்ளார்.​

சைமன் ஓவர்லேண்ட் இப்படி யோசனை கூறியுள்ளதற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் நல அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சைமன் ஓவர்லேண்ட்டின் யோசனையைப் பார்த்தால் ஆஸ்திரேலியாவில் பணக்காரர்களாக வாழ இந்தியர்களுக்கு உரிமை கிடையாது என்பது போல் உள்ளது.​ இந்த யோசனை கேலிக்கூத்தானது என்றும் அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் குப்தா தெரிவித்தார்.

No comments: