
எந்தவொரு சிறுபான்மை இனத்திற்கும் அநீதி இழைக்கப்பட சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ற வகையில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தக் கூடிய வழி வகைகள் உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டு 24 மணித்தியாலங்களுக்குள் அரசியல் தலையீடு காணப்படும் நிறுவனங்களின் அரசியல் தலையீடுகள் அகற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய காலத்தில் சம்பள உயர்வு மற்றும் பொருட்களின் விலை குறைப்பை ஏற்படுத்தி நீண்ட கால பொருளாதாரத் திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுபான்மை மக்களின் அடையாளங்களை பேணக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment