மாஸ்கோ, ஜன.28: ராணுவ செயற்கைக்கோளை ரஷியா வியாழக்கிழமை விண்ணில் ஏவியது. கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் விண்வெளி மையத்திலிருந்து புரோட்டன்-எம் ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதாக ரஷிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் உள்ளூர் நேரப்படி 3.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. செயற்கைக்கோள் 9.18 மணிக்கு விண்வெளியில் நிர்ணயிக்கப்பட்ட பகுதியைச் சென்றடைந்ததும், ராக்கெட்டிலிருந்து பிரிந்து வட்டப்பாதையை அடைந்தது என அந்நாட்டு ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
விளக்குமார் ஒரு நாள் விளங்கும்.
http://manithaneyaexpress.blogspot.com/
Post a Comment