Nov 28, 2009

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம் சொல்கிறது லிபரான் அறிக்கை நமுத்துப்போன குற்றச்சாட்டு:



புதுடில்லி:""பார்லிமென்டில் தாக்கல் செய்யும் அளவு, லிபரான் அறிக்கை, பெரிய விஷயம் அல்ல; நமுத்துப்போன குற்றச்சாட்டாக, பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கான செய்தியாக மட்டுமே அது உள்ளது,'' என்று, ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாத இயக்கம் கூறியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்க பத்திரிகையான "ஆர்கனைசர்' தலையங்கத்தில் இது குறித்து எழுதப்பட்டிருப்பதாவது,அந்த அறிக்கை முறையாக பார்லிமென்டில் விவாதத்துக்கு வரும் என்று நம்பியிருந்தோம். ஆனால் அது பத்திரிகைகள், "டிவி'க்களுக்கு உரிய செய்தியாகி விட்டது.கடந்த 1992 டிசம்பர் 6ல், அயோத்தியில் லட்சக்கணக்கில் திரண்டிருந்த இந்துக்களின் (தீவிரவாதிகளின்) தன்னிச்சையான, எவ்விதப் புறத்தூண்டுதலுமின்றி நடந்தது தான் அந்தச் சம்பவம்.

நீதிபதி லிபரான், அந்த நேரத்தில் அங்கு இல்லை. உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் குற்றாவளியாகும்போது, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஏன் குற்றவாளியாக முடியாது? பத்திரிகைகளில் கசிந்தது தான், இந்த அறிக்கை கண்ட பலன். இவ்வாறு அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: