Nov 5, 2009
வியட்நாம்: சூறாவளி பலி 99 ஆக உயர்வு
மிரினேய் சூறாவளி தாக்குதலால் வியட்நாம் நாட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 99 ஆக இன்று உயர்ந்துள்ளது. புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஃபூ யென் மாகாணத்தில் 69 பேர் பலியாகி உள்ளதாக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் பின்ஹ் தின் மாகாணத்தில் 13 பேரும், கன்ஹ் ஹோவா மாகாணத்தில் 12 பேரும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் வியட்நாமின் மத்திய பகுதியில் உள்ள மாகாணங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வியட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகளில் மழை கொட்டி வருகிறது. கடந்த செப்டம்பரில் வீசிய கெட்ஸனா சூறாவளிக்கு வியட்நாமில் 160 பேர் உயிரிழந்த நிலையில், மிரினேய் (Mirinae) சூறாவளி அந்நாட்டை ஓரிரு நாட்களுக்கு முன் தாக்கியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment