Oct 23, 2009

சாமியார்களின் அவலம்

பிரிட்டனின் சிறுவர்களை வன்புணர்வு செய்த பாதிரியார் ஒருவரு குற்றம் நிரூபிக்கப்பட்டமையால் 14 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இக்குற்றச் செயல் புரிவதற்கு உடன்படுவதற்காகச் சிறுவர்களைக் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கினார் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

47 வயதாகும் பீட்டர் ஹெட்ஜ் என்ற பாதிரியார் 1990களில் பல சிறுவர்களைப் பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தியதாகவும், அவர்களுக்கு கஞ்சா உள்பட பல்வேறு போதை மருந்துகளை அளித்து வன்புணர்வு செய்ததாகவும், அவரது இச்சைக்கு இணங்க மறுத்த சிறுவர்களைக் கடுமையாகத் தாக்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டார்.

காவல்துறை விசாரணையின் போது இக்குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபணம் ஆகவே, நீதிமன்றம் இவர் மீது 14 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதி தனது தீர்ப்பில், பாதிரியார் ஹெட்ஜ் தனது உயர்ந்த பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதைக் கடுமையாகச் சாடினார்.

இங்கிலாந்து திருச்சபை செய்தித் தொடர்பாளர் இக்குற்றம் தனிப்பட்ட ஒன்று என்றூம் இதுபோல் முறைகேடுகள் நடக்க திருச்சபை அனுமதிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.
------------------------------------------------------


நபியவர்கள் கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ (முஸ்லிம்)


"நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)

நபி அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)
-----------------------------------------------------------
இஸ்லாத்தில் சந்நியாசம் இல்லை,எல்லாரும் திருமணம் முடிக்க வேண்டும் என்பது நபிகள் நாயகம் ஸல் அவர்களின் அருள் வாக்கு ஆகும்.ஆனால் கிறிஸ்தவம்,இந்து மதங்களில் சந்நியாசம்,புரோகிதம் உண்டு,அவர்கள் திருமணம் முடிக்கக்கூடாது என்ற அவர்களின் முடிவால்,இப்படி கள்ளத்தனமான ஈன உறவுகள்,வைப்பாட்டி,ஓரின புணர்ச்சி என்று தலை விரித்தாடுகிறது.மக்களே சிந்தியுங்கள்,இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தை ஏற்று,நன் மக்களாய் வாழுங்கள்.

1 comment:

THAMEEM ANSARI said...

Assalamu Alaikkum

PLZ VISIT : www.thameem1984.spaces.live.com