Oct 24, 2009

இந்திய சீன பிரதமர்கள் சந்திப்பு


அருணாசலப் பிரதேசம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக, சமீபத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அறிக்கைப் போராட்டம் நடைபெற்ற நிலையில் தாய்லாந்தில் நடைபெறும் ஆசியான் கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், சீனப் பிரதமர் வென் ஜியாபாவோவும் கலந்துகொண்டார்கள். அப்போது, இரு தலைவர்களும் தனியாகச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்கள்.

ஆனால், அருணாசலப் பிரதேசம், சீனா தனது எல்லைக்குள் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றில் அணை கட்டுவது தொடர்பான சர்ச்சை குறித்தோ, காஷ்மீர் குறித்த சீனாவின் நிலைப்பாடு குறித்தோ விவாதிக்கப்பட்டதாக இந்திய அதிகாரி தெரிவிக்கவில்லை.

No comments: