Oct 23, 2009

பகுத்தறிவை இழந்த கருணாநிதி


இன்று நாளிதழ்களில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றிய விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில் காலம் வீசும் கயிற்றை தடுக்கும் கலைஞர் காப்பீட்டுத்திட்டம் என்ற வர்ணனையோடு எமதர்மன் எருமை வாகனத்தில் வந்து ஒரு வயோதிகர் மீது 'பாச[?] கயிறை வீசுவது போலவும், அதை கலைஞர் காப்பீட்டுத்திட்டம் என்ற கேடயம்[அதாவது கலைஞர்] தடுப்பது போலவும் படம் வெளியாகியுள்ளது.

உயிரை வாங்குபவர் எமதர்மன் என்றும், அவர் எருமை வாகனத்தில் வருபவர் என்றும் ஒரு நம்பிக்கை இந்து சமுதாய மக்களிடம் உண்டு. அதை நாம் தவறென்று சொல்லமாட்டோம். அது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம். அதே நேரத்தில் அனைத்து மதத்தவருக்கும் பொதுவான மத சார்பற்ற அரசு, அதிலும் குறிப்பாக தன்னை பகுத்தறிவாளர் என்று பறைசாற்றிக் கொள்ளும் கலைஞர் அரசு, இத்தகைய விளம்பரம் செய்துள்ளது வியப்பாக உள்ளது. இதன் மூலம் எமதர்மன்தான் உயிரை வாங்குபவர் என்ற சித்தாந்தத்தை ஏற்பது போன்ற தோற்றத்தை இந்த விளம்பரம் தருவதை மறுக்கமுடியாது. ஒரு மத சார்பற்ற அரசு தனது எந்த ஒரு செயல்களிலும் ஒரு சின்ன அளவு கூட மதத்தை பிரதிபலிக்கும் செயல் வந்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தவேண்டும். என்ன செய்வது..? அரசின் சின்னமே ஆண்டாள் கோவிலாக இருக்கும்போது இதெல்லாம் 'ஜுஜுபி' என்கிறீர்களா

1 comment:

anwar said...

முதலில் கலைஞருக்கு இஸ்லாத்தை அழகிய முறையில் எடுத்து சொல்லுங்கள்,