Oct 23, 2009

'2011 ல் உலக மக்கள் தொகை 7 பில்லியனை தொட்டுவிடும்'


வருகிற 2011 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 7 பில்லியனை தொட்டுவிடும் என்று உலக மக்கள் தொகை பதிவறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஆர்பி ( Population Reference Bureau ) எனப்படும் மக்கள் தொகை குறிப்புக் கழகம் தயாரித்துள்ள பதிவறிக்கையில் மேற்கூறிய விவரம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இளம் வயது மக்கள் தொகையின் எண்ணிக்கை ஏழை நாடுகளில், குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் அதிகரித்து காணப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இளம் வயது மக்கள் தொகையின் எண்ணிக்கை ஆண்டுக்கு 24 மில்லியனாக அதிகரிப்பதாகவும்,இது வருகிற 2010 ஆம் ஆண்டு வாக்கில் இரு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: